பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

பிரதாப முதலியார் சரித்திரம்

களில் விட்டு, தமிழும் இங்கிலீஷும் அப்பியாசிக்கும்படி செய்வித்தான். அனந்தையன் இங்கிலீஷில் அதிக கவனமுள்ளவனாய், அந்தப் பாஷையில் கூடியவரையில் எழுதவும் பேசவுங் கற்றுக் கொண்டு பாடசாலையை விட்டுவிட்டான். இங்கிலீஷில் அவனுக்குத் தெரிந்த அற்பப் படிப்பைக் கொண்டு, அந்தப் பாஷையில் தான் பூரண விற்பத்தியடைந்து விட்டது போல் அகம்பிரமம் அடைந்தான். தமிழ்ப் பாஷையை அவன் எவ்வளவுங் கவனிக்காமையினால் அந்தப் பாஷையில் நெடுங் கணக்குக் கூட அவனுக்குப் பூரணமாய்த் தெரியாது.

தமிழ் பாஷையை வாசிப்பதும் பேசுவதும் தனக்குக் கௌரவக் குறைவாக எண்ணிவிட்டான். அவனுடைய தயவு யாருக்காவது வேண்டியிருந்தால் அவன் இங்கிலீஷில் பூரண வித்வானென்றும், தமிழில் ஒன்றும் தெரியாதவனென்றும் யாராவது சொன்னால் அவர்களிடத்தில் அத்தியந்த விசுவாசமும் வைப்பான். அவனுக்குச் சுதேஷ பாஷா ஞானம் எப்படி இல்லாமற் போய் விட்டதோ அப்படியே தேசாபிமானமும் போய்விட்டது. இந்தத் தேசத்தையும் தேசாசாரங்களையும் நிந்திப்பதும் ஐரோப்பாக் (Europe) கண்டத்தைப் புகழுவதுமே அவனுக்கு நித்திய காலக்ஷேபம். அவன் தமிழ் பாஷை பேசுகிற வழக்கத்தை கட்டோடே விட்டுவிட்டு எப்போதும் இங்கிலீஷ் பாஷையிலே சம்பாஷிப்பதால் அந்தப் பாஷை தெரியாத அவனுடைய தாய் தந்தை சுற்றத்தார் முதலானவர்களுடைய சல்லாபத்தையும் நேசத்தையும் இழந்து போனான். அவன் அவர்களிடத்தில் பேசும்படியான அகத்தியம் நேரிட்டால் இங்கிலீஷும் தமிழும் தெரிந்த துவிபாஷிகள் மூலமாய்ப் பேசுகிறதே தவிர அவன் வேறே ஒரு வார்த்தையும் பேசுகிறதில்லை. தொப்பி ஒன்று தவிர மற்ற விஷயங்களில் ஐரோப்பியருடைய நடை உடை பாவனைகளையெல்லாம் அனுசரிக்கத் தலைப்பட்டான். அவனுடன் எப்போதும் இங்கிலீஷ்