பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்துக்‌ கெட்டவன்‌

187

தும் தண்ணீரில் முழுகாமல் இரத்தப் பிரவாகத்துடன் காலினால் நீந்திக்கொண்டு தண்ணீரில் நிற்கிற பரிதாபமான காக்ஷியும் அவனுடைய சகோதர பக்ஷமும் படகிலிருந்தவர்களுக்கு இரக்கத்தை உண்டுபண்ணின படியால் அவர்கள் ‘இந்த ஒரு பிராணனை ரக்ஷிப்பதனால் நமக்கு என்ன நஷ்டம் சம்பவிக்கக்கூடும்?’ என்று சொல்லி அவனைப் படகின் மேல் ஏற்றிக்கொண்டு அவனுடைய காயங்களைக் கட்டி சொஸ்தப்படுத்தினார்கள். அவர்கள் சில நாள் யாத்திரை செய்து தெய்வ சகாயத்தினால் குறித்த இடத்துக்குச் சிந்தாத்திரையாகப் போய்ச் சேர்ந்தார்கள்”” என்றேன்.




29-ஆம் அதிகாரம்
படித்துக்‌ கெட்டவன்‌

ஒரு நாள் தேவராஜப் பிள்ளை என்னையுங் கனகசபையையும் பார்த்து “இங்கிலீஷில் சகல சாஸ்திரப் பண்டிதராகிய பேக்கன் (Bacon) என்பவர் யுஅற்பப் படிப்பு ஆபத்துரு என்று சொல்லுகிறார். அதற்கு அஜகுணமாக எனக்குத் தெரிந்த ஒரு அற்பப் படிப்பாளியின் சரித்திரத்தைக் கேளுங்கள்” என்று செப்பலுற்றார்.

சென்னை நகரத்தில் சுப்பையன் என்று பெயர் கொண்ட ஒரு ஏழைப் பிராமணன் இருந்தான். அவன் ஒரு தர்ம சத்திரத்தில் குடியிருந்து கொண்டு அதில் வந்து இறங்குகிற வழிப்போக்கருக்குச் சாதம் சமையல் பண்ணி விற்றுக் காலக்ஷேபஞ் செய்து வந்தான். அவனுடைய பிள்ளை அனந்தையனைத் தர்மப் பள்ளிக் கூடங்-