பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

பிரதாப முதலியார் சரித்திரம்

விரோதிகளுடைய கிரந்தங்களை அவன் படித்ததினால் தெய்வம் இல்லை; வேதம் இல்லை; பாபபுண்ணியங்கள் இல்ல; நரகம் மோக்ஷம் இல்லை; உலக சுகமே சுகம் என்கிற சித்தாந்தம் உள்ளவனானான். மேற்சொல்லிய சமய விரோதிகள் உலகத்துக்கு ஒரு சமயம் அவசியந்தானென்றும் அப்படியில்லாதவரையில் அக்கிரமம் நடக்குமென்றும் ஒப்புக் கொண்டார்கள். அப்படியே வால்டேர் (Voltaire) ஒரு தேவாலயம் கட்டினார். ஹூம் (Hume) சில சமயங்களில் கோவிலுக்குப் போனான். காலின்ஸ் (Collins) தன்னுடைய வேலைக்காரர்கள் தன்னைக் கொலை செய்யாமலும் திருடாமலும் இருக்கவேண்டியதற்காக அவர்கள் கோவிலுக்குப் போகும்படி கட்டாயஞ் செய்தான். ஹக்ஸ்லி (Huxley) பைபிள் (Bible) என்னும் சுவிசேஷத்தைப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படிக்கவேண்டுமென்று முயற்சி செய்தான். டிண்டால் (Tyndal) தன்னை யாராவது சமய விரோதி என்று சொன்னால் சண்டைக்கு வருவான். இவ்வாறாக மேற்படி வித்வான்களுடைய நூல்கள் ஒருவிதமாகவும் நடை வேறொரு விதமாகவும் இருந்தன. ஆனால் அனந்தையனுடைய வார்த்தையும் நடையும் ஒரே தன்மையாயிருந்தன. தெய்வம் இல்லை பாபபுண்ணியம் இல்லை என்கிற சித்தாந்தத்தைத் தனக்குள்ளே வைத்துக் கொள்ளாமல் தன் பெண்சாதி பிள்ளைகள் முதலானவர்களுக்கு உபதேசிக்கவும் தானே துன்மார்க்கங்கள் செய்து அவர்களுக்கு வழிகாட்டவும் ஆரம்பித்தான். பணமே தெய்வமென்றும் அதனைச் சம்பாதிக்கிறதற்கு ரகசியத்தில் எந்த அக்கிரமம் வேண்டுமானாலுஞ் செய்யலாமென்றும் ஆனால் யோக்கியனைப் போல் வேஷம் போடுவது உத்தியோகத்தையும் பணத்தையும் சம்பாதிக்கிறதற்கு மார்க்கமா யிருப்பதால் அந்தப்படி செய்ய வேண்டியது அகத்தியம் என்றும் நினைத்து அவன் வெளிவேஷம் போட்டுக் கொண்டு வந்ததால் அவனுக்கு ஒரு தாலூகா முன்சீப் உத்தியோகங் கிடைத்தது. அந்த உத்தியோகம் கிடைத்த-