பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தையை இகழ்ந்த மைந்தன்‌

191

வுடனே இந்திரப் பட்டம் கிடைத்தது போல் அவன் சுத்தமாய்த் தன்னை மறந்துவிட்டான். தன்னுடைய எளிய தகப்பனைத் தகப்பனென்று சொல்லவே அவனுக்குச் சங்கோசம் வந்துவிட்டது. பெரிய பணக்காரர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுத் தான் அவர்களுக்குப் பிள்ளையா யிராமற் போனதற்காக ஓயாமல் மனஸ்தாபப் படுவான். யாராவது ஒரு திரவியவந்தனைத் தனக்குப் பிதாவென்று சொல்லிக் கொள்ள அவனுக்குச் சம்மதந்தான். ஆனால் அந்தத் திரவியவந்தர் கேள்விப் பட்டால் சண்டைக்கு வருவாரென்று பயந்து சும்மா இருந்துவிட்டான்.

அனந்தையன் தன் தகப்பனைத் தகப்பனென்று சொல்லுவதற்குக் கூட வெட்கப்படுகிறானென்று பல பெரிய மனுஷர்களுக்குத் தெரியும். அவர்களிற் சிலர் அனந்தையனைக் கண்டுகொள்வதற்காக அவனுடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வருகிற சமாசாரங் கேள்விப்பட்டு அனந்தையன் எதிர்கொண்டுபோய் அவர்களுக்குக் கைலாகு கொடுத்து அழைத்துக்கொண்டு வந்தான். அப்போது தெருத் திண்ணையில் அவனுடைய தகப்பனார் சுப்பையர் உட்கார்ந்திருந்தார். அவருடைய முகச் சாயலும் ஒரே தன்மையாயிருந்தபடியால் அவர் யாரென்று அந்தப் பெரிய மனுஷர்கள் அனந்தையனை இங்கிலீஷ் பாஷையில் கேட்க அவன் தன்னுடைய வேலைக்காரனென்று அனந்தையன் இங்கிலீஷில் மறுமொழி சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே போய் அவர்களுக்குத் தக்க மரியாதை செய்து சம்பாஷிக்கத் துவங்கினான். அவர்கள் இவன் தகப்பனையே வேலைக்காரனென்று சொல்கிறானென்று அனுமானித்துக் கொண்டு அவனை அவமானப்படுத்த வேண்டுமென்கிற எண்ணத்துடன் “ உம்முடைய தாயையும் தந்தையையும் நாங்கள் பார்க்கக்கூடாதா? அவர்களை நாங்கள் பார்த்து சந்தோஷிக்கும் பொருட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று பிடிவாதஞ் செய்தார்கள். அனந்-