பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்வரால் அறிவு பெற்ற கயவன்‌

195

உங்களுக்கு ராஜ தண்டனை இல்லாவிட்டாலும் தெய்வதண்டனை இல்லாமற்போகுமா?” என்றான்; அவர்கள் உடனே கைகொட்டிச் சிரித்துக்கொண்டு “எங்களால் நீ தெய்வத்தின் உண்மை அறிந்ததால் உனக்கு மதி வந்தது; எங்களுக்கு நிதி வந்தது; உனக்குக் குணம் வந்தது; எங்களுக்குப் பணம் வந்தது” என்று மொழிந்துகொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

அன்று முதல் அவன் தெய்வம் இல்லையென்கிற வார்த்தையை விட்டு விட்டபடியால், அவனுடைய தாய் தந்தை ஆசாரியர்களைப் பார்க்கிலும் அந்தத் திருடர்களே அவனுக்குப் போதக குருவென்று சொல்லலாம். அவர்கள் குருதட்சணையைப் போல அவனுடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்ட படியால், யுபழைய குருடி கதவைத் திறடிரு என்பதுபோல அவனுடைய பூர்வ தரித்திர தசையில் வந்துவிட்டான். அவன் பொருளையும் இழந்து பிணியினால் வருந்துவதை அவனுடைய தந்தை தாய் கேள்வியுற்று அவன் செய்த துரோகங்களையெல்லாம் மறந்துவிட்டு, அவன் வீட்டுக்குப் போய் வேண்டிய காரியங்களைச் செய்து அவனைச் சௌக்கியப்படுத்தினார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் உதவி செய்யாவிட்டால் அவன் பிராணவியோகம் ஆயிருப்பானென்பதில் சந்தேகமில்லை. அவன் ஒரு ஆண்டு முழுமையும் தீர்க்கரோகமா யிருந்தமையால் அவனுடைய தாய் தந்தையர் யாசகஞ் செய்து அவனைக் காப்பாற்றினார்கள். அவன் சௌக்கியம் அடைந்த பிறகு யாசகத் தொழிலைத் தவிர இவன் ஜீவிக்கிறதற்கு மார்க்கமில்லை. அவனுடைய தாய் தகப்பனுக்கு இரங்கி யாசகங் கொடுக்கிறார்களே தவிர அவனுக்கு இரங்குகிறவர்கள் ஒருவருமில்லை. நான் ஒருநாள் தெய்வத்தைக் குறித்துப் பேசினேன். அவன் தனக்குத் துரோகஞ் செய்து ஓடிப்போன தன் பெண்சாதி பிள்ளைகளும், வேலைக்காரர்களும், திருடர்களும் இந்த உலகத்தில் ராஜநீதியைத் தப்பிக்கொண்டபடியால், அவர்-