பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரத்‌ தண்ணி துணிவும்‌ முயற்சியும்‌

199

படிக்குப் பொய்ச் சத்தியஞ் செய்தவர்களுக்குத் தகுந்த சிட்சை செய்யவேண்டியது முக்கியமாயிருக்கிறது. ஆகையால் பாளையதார் உள்படச் சகல சாக்ஷிகளையும் அவர்களுடைய ஆயுள் பரியந்தம் தீவாரந்தத்துக்கு அனுப்புகிறதென்றும் அவர்களுடைய சொத்துக்களை யெல்லாம் பறிமுதல் செய்து கவர்ன்மெண்டாரைச் சேருகிறதென்றும் தீர்மானஞ் செய்திருக்கிறோம்” என்று சொல்லி எங்களுக்குக் கைவிலங்கு கால்விலங்கு மாட்டிக் காவலில் வைக்கும்படி உத்தரவு செய்தார்கள்.

இந்தத் தீர்மானத்தைக் கேட்டவுடனே எங்களுடைய நிலைமை எப்படி இருந்திருக்குமென்று நான் சொல்லவும் வேண்டுமா? உடனே “ஐயோ! தெய்வமே! என்ன செய்வோம்?” என்கிற கூக்குரலும், அழுகைக் குரலும் எங்கும் கிளம்பிற்று. பெண்சாதிகளை நினத்து அழுகிறவர்களும், பிள்ளைகளை நினைத்து அழுகிறவர்களும், தாய்தந்தை சுற்றத்தாரை நினைத்து அழுகிறவர்களும், ஆஸ்திகளை நினைத்து அழுகிறவர்களும் இவ்வகையாக எங்கும் அழுகைக் குரலே தவிர வேறொரு சப்தமுமில்லை. தேவராஜப் பிள்ளை எழுந்து மற்றவர்களை நோக்கி “ஐயையோ! உங்கள் எல்லோருக்கும் நான் ஒருவன் கூற்றுவனாயிருந்தேனே! என்னாலே உங்கள் ஆஸ்திகளை இழந்தீர்களே! பெண்சாதி பிள்ளைகளை இழந்தீர்களே! ஆயுசு வரையில் தண்டனையும் அடைந்தீர்களே! நீங்கள் எனக்கு உபகாரஞ் செய்ய வந்து பெருந் துன்பத்தை அடைந்தீர்களே! இந்தத் துக்கத்தை நான் எப்படிச் சகிப்பேன்!” என்று சொல்லிப் புலம்பினார். பிறகு அவர் என்னையும் என் தகப்பானாரையும், என் மாமனாரையும் நோக்கி “இந்தத் துன்பத்தை அனுபவிக்கத் தானா நீங்கள் ஊரைவிட்டு இவ்வளவு தூரம் வந்தீர்கள்? நீங்களும் உத்தம பத்தினிகளுஞ் செய்த தர்மங்கூட உங்களைத் தலைகாக்காமற் போய்விட்டதே! அந்த மகா உத்தமிகள் இந்தச் செய்திகளைக் கேட்டுச் சகிப்பார்களா? பிராணனை வைத்திருப்பார்களா? நீங்க ளாவது தப்பி யிருந்தால்,