பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவர்னர்‌ துரை நீதி முறைமை

207

தாயார் முதலிய ஸ்திரீகள் புறப்பட்டுக் கவர்னரவர்களுடைய உத்தியானம் தாண்டி வெளியே வந்தார்கள். அந்த உத்தியான வாசற்படிக்கு வெளியே பட்டண ஸ்திரீகளெல்லாம் திரண்டு மொய்த்து என் தாயாரையும் ஞானாம்பாளையும் மற்ற ஸ்திரீகளையும் பார்த்துப் பரிதாபப் படுகிறவர்களும், என் தாயாரைப் புகழ்ந்து கொண்டாடுகிறவர்களும் அவர்களைத் தங்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறவர்களுமா யிருந்தார்கள். அவர்களில் எங்களுக்கும் பாளையதாருக்கும் பந்துக்களும் பரிச்சயமானவர்களும் அநேகர் இருந்தபடியால் அவர்கள் கிருகங்களுக்குப் போய்ப் போஜனம் செய்தபிற்பாடு எங்களுடைய ஸ்திரீகள் வாகனாரூடராய்ப் புறப்பட்டுப் போய்த் தங்கள் ஊரை அடைந்தார்கள். மறுநாளே கவர்னர் அவர்கள் அவருடைய பரிவாரங்களுடன் வேதபுரி என்னும் ஊருக்கு வந்து, கூடாரங்களில் இருந்து கொண்டு பரிசீலனை பண்ணத் தொடங்கினார். பாளையதாரும் சாக்ஷிகளும் எழுதி வைத்த வாக்குமூலங்களையும் இரண்டு விசாரணைக் கர்த்தர்கள் செய்த தீர்மானத்தையும் அதற்கு விரோதமாய் மற்றொரு விசாரணைக் கர்த்தர் கொடுத்த அபிப்பிராயத்தையும் இன்னும் மற்ற லிகிதங்களையும் வாசித்துப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டார். பாளையதார் தனக்குப் பிள்ளையில்லை யென்று சிரெஸ்ததாருக்கு எழுதினதாகச் சொல்லப்பட்ட கடிதம் ஒன்று தான் பாளையதார் கக்ஷிக்குக் கொஞ்சம் பாதகமாயிருந்தது. பாளையதார் சிரெஸ்ததாருக்கு எழுதியிருந்த ஒரு வாஸ்தவமான கடிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு அது வைத்திருந்த உறைக்குள்ளே சிரெஸ்ததார் ஒரு பொய்யான கடிதத்தை எழுதி வைத்துக் கொண்டு மாறுபாடு செய்ததாக அநேக சாக்ஷிகளாலும் அனுமானங்களாலும் ஸ்தாபிக்கப்பட்டபடியால் கவர்னர் அவர்களுக்கு உண்டாயிருந்த அற்ப சந்தேகமும் நிவர்த்தியாய் விட்டது. உடனே கவர்னர் அந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்க ளுடைய தீர்மா