பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxvii

தொகுதியில், குடும்ப சபந்தமான கீர்த்தனைகள், இதோப தேசக் கீர்த்தனைகள் என்பன போன்ற உட் பிரிவுகளும் உண்டு. கிறிஸ்து சமயச் சார்பாகத் தாம் பாடிய பல கீர்த்தனைகளைத் தொகுத்து ஒரு தனி நூலாக்கினார். அதற்குச் “சத்திய வேத கீர்த்தனைகள்” எனப் பெயரிட்டு 1889இல் வெளியிட்டார்.

அவர் மொழி பெயர்ப்பாளராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட தமிழிசைத் தொண்டு, அவரது இறுதிக் காலம்வரை தொடர்ந்து இயன்றது. அவரின் இசைப்பாடல்ளை இன்றும் இசையரங்குகளிலும் வானொலியிலும் நாம் கேட்டு மகிழ்கிறோம்.

பெண்கள் முன்னேற்றம் :

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்களைப்போல் பெண்களும் கல்வி கற்றுச் சிறந்திருந்தனர். கவி பாடும் திறமையும் பெற்று விளங்கினர். ஆனால் முஸ்லிம் ஆட்சி இங்கு பரவிய காலத்தில் ‘பெண்ணடிமை’ ஏற்பட்டது. “பெண்கள் படித்தல் கூடாது;படித்தால் கெட்டு விடுவார்கள்” என்ற பல்லவி எங்கும் பாடப்பட்டது. வாழ்வில் சரி பங்காகிய பெண்களும் கல்வி கற்று அறிவுடையோராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் நற்குண, நற்செயல்கள் உடையோராகஇருக்க வேண்டியதன் அவசியத்தையும் வேதநாயகர் உணர்ந்தார்.

இத்தகைய பெண்கள் முன்னேற்றத்தின் இன்றியமையாமையைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிவிக்க விரும்பினார். பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டிய செய்திகளை இனிய இசைப் பாடல்களாக எழுதி, “பெண்மதி மாலை“ என்ற சிறு நூலாக 1809 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பெண்கள் முன்னேற்றத்தில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தி “பெண் கல்வி“, “பெண் மானம்“ என்ற இரு உரைநடை நூல்களை எழுதி, அவற்றை ஒரே நூலாக, 1870இல் வெளியிட்டார். பெண்கள் கல்வி