பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxvii

தில் : 1862இல் '(“சித்தாந்த சங்கிரகம்”) (சித்தாந்த = சட்டம்; சங்கிரகம் = தொகுப்பு) என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார். தமிழ் மொழியில் வெளிவந்த முதல் சட்டத்துறை நூல் என்ற பெருமை இதற்கேயுண்டு.

தமிழிசைத் தொண்டு :

அக்காலத்தில்—வேதநாயகர் மொழி பெயர்ப்பாளராக இருந்த காலத்தில்— தமிழ் நாட்டில் இசையரங்குகளில்— கச்சேரிகளில்—பாடப்பட்ட இசைப்பாடல்கள் தமிழ் மொழியில் அமைந்தவையல்ல. திருவாரூர் இசை மும்மணிகளான தியாகராயர், முத்துசாமி தீட்சதர், சாம சாத்திரி ஆகியோர் தெலுங்கு மொழியில் இயற்றிய கீர்த்தளைகளே அவை. தமிழ் நாட்டில் தமிழிசையில் பாடப்படும் தமிழ்ப் பாடல்கள் இல்லையே என்று தமிழ்ப்பற்று மிக்க வேதநாயகர் வேதனையுற்றார். இதனைப் போக்கத் தாம் ஏதேனும் செய்ய இயலுமா என்று எண்ணினார். தாமே இசைப் பாடல்கள் இயற்றித் தமிழிசைத் துறைக்குத் தொண்டு செய்ய விரும்பினார். இசையறிவு இல்லாத தன்னால் இசைப் பாடல்கள் இயற்ற இயலாமையையும் எண்ணினார். அதனால், இசைப் புலவர் இருவரிடம், தன் ஓய்வு நேரத்தில் இசை பயின்றார். பின்னர், இசைப் பாடல்களை—கீர்த்தனங்களைத்— தமிழில் இயற்றினார். அவற்றை இசையரங்குகளில் பாடச் செய்தார். அவை தெலுங்கு கீர்த்தவங்களைவிடச் சிறந்திருப்பதைப் பலரும் ஏற்றுக்கொள்ளச் செய்தார். தமிழில் இசைப் பாடல்களை இயற்ற முடியாது என்றிருந்த குறையைப் போக்கினார். தொடர்ந்து முயன்று பல இசைப்பாடல்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார்.

இங்ஙனம், இயற்றப்பட்ட 200க்கு மேற்பட்ட கீர்த்தனைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கினார். அவை மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றிப் பாடி மகிழத்தக்கவை. எனவே, அந்நூலுக்குச “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்” எனப் பெயரிட்டு, அதனை 1878இல் வெளியிட்டார். இத்-