பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxvi

பெற்றும், தம் இறுதிக் காலத்தில், தனியராகவே வாழ்த்தார் நம் தண்டமிழ் நாயகர்.

எனினும் அவரது இல்லறம் இனிதே இயன்றது. அவரைத் தேடி அவரது இல்லத்திற்கு வந்த விருந்தினர் எண்ணற்றவர். அவர்களையெல்லாம் இன்முகத்தோடு வரவேற்று, இன்சொல்கூறி, உண்டியும் உறையுளும் உவந்தளித்து ஓம்பினார் நம் வேதநாயகர், தமது வருவாயில் சிறுகச் சிறுகச் சேர்த்த தொகையைக் கொண்டு, மாயூரத்தில் ஒரு மாடி வீட்டை விலைக்கு வாங்கி, அதில் தம் இறுதிக் காலம்வரை வாழ்ந்து வந்தார். அவ்வீடு இதுபோழ்து. மாயூரம் பேருந்து நிலையத்தையொட்டி முதன்மைத் தெருவில் ஒரு கடையாக மாற்றப்பட்டுக் காட்சியளிக்கிறது.

தொண்டுகள்

. சட்டத்துறைத் தொண்டு:

வேதநாயகர் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்த காலத்தில் மாவட்ட நீதி மன்றங்களுக்கு மேலாணை நீதி மன்றமாக விளங்கிய மாநில நீதி மன்றத்தில் (Sadar- Court) வழங்கப்பட்ட தீர்ப்புகள் பல, மாவட்ட நீதி மன்றம் களில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டு வந்தன. அவ்வழக்கு விவரங்களும், அவை தொடர்பான சட்டங்களும் ஆங்கிலத்திலேயே இருந்ததால், ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாத வழக்குரைஞர்களும் மக்களும் அவற்றை அறியக்கூடவில்லை.

ஆகவே 1805 ஆம் ஆண்டுக்கும் 1861ஆம் ஆண்டுக்கும் sடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முதன்மையான சட்டங்கள், வழக்குகள், தீர்ப்புகள் ஆகியவற்றைத் தெரிந்தெடுத்து அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தார். அலுவல் ஒழிந்த ஓய்வுநேரங்களிலேயே இதனைச் சிறுகச்சிறுகச் செய்து முடித்தார். இதனை, அவர் மாயூரம் நீதிபதியாக இருந்த காலத்-