பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XxXV

தரவேண்டும் என்பதற்காக, வேலையினின்று தாமே விலகிச் கொள்ளுமாறும் ஆயுட்காலம் முழுவதும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளுமாறும் வேதநாயகருக்கு (Pension) அறிவுரை கூறிக் கடிதம் ஒன்றை வரைந்தனர். உடல் நலக்குறைவையும், குடும்பப் பொறுப்புகளையும், தமிழ்த் தொண்டு, பொதுநலத்தொண்டு ஆகியவற்றில் தனக்கிருந்த ஈடுபாட்டையும், ஆங்கில ஆட்சியில் நடைபெற்று வந்த அந்தப் போக்குகளையும்; மனத்தில் கொண்டு, வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேதநாயகர் விரும்பினார். ஆகவே, அரசியலாரின் அறிவுரைக்கு இணங்கி, ஓய்வூதியம் பெற்று, வேலையினின்றும் விலகிக் கொள்ள விரும்புவதாக விடை எழுதினார். நெறியற்ற நெல்சனோ, அவருக்கு ஓய்வூதியம் தருதல் கூடாது என்று தடை கூறினான். ஆயினும், அரசியலார் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பதினாறாண்டுகள் நல்ல நீதிநாயகராக விளங்கிய வேதநாயகர் 1872ஆம் ஆண்டு வேலையினின்றும் விலகினார்.

இல்லறம் :

“இல்லறமே நல்லறம்” என்றெண்ணி நம் வேதநாயகர் தம் 25 ஆம் அகவையில் (1851 இல்) இல்வாழ்வை மேற்கொண்டார். காரைக்காலை சேர்த்த பாப்பம்மாள் என்பவரை மணந்தார். சிறிது காலத்திற்குப்பின், அவர் காலமாகவே, தன் தமக்கையான ஞானப்பூ அம்மாளின் மகள் இலாசர் அம்மையாரை இரண்டாம் தாரமாக ஏற்றார். சில ஆண்டுகள் கழித்து, அவர் இறையடி எய்தவே, புதுச்சேரியைச் சேர்ந்த மாணிக்கத்தம்மையாரை மணந்தார். அவர் ஞானப்பிரகாசம், சவரி முத்தம்மாள், இராசாத்தியம்மாள் என்ற மூன்று மக்களைப் பெற்றபின், முன்னவர் வழியே சென்றபோது புதுவை அண்ணுக்கண்ணம்மாளை மணந்தார். அவரது மறைவுக்குப் பின் அம்மாளம்மாள் என்பவரை மணந்தார். அவரும் தன் கணவனுக்கு முன்னதாகவே காலமாகிவிட்டார். இங்ஙனம் அருமை மனைவியர் ஐவரைப்-