பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாளுக்கு அரண்மனை உபசாரம்‌

271

பதியே! அந்த இருவருக்கும் யுஉண்டுகாட்டிகள்ரு என்று பெயர். அவர்களை விஷபரீக்ஷகர்களென்றுஞ் சொல்லலாம். மகாராஜாவினுடைய உணவில் யாராவது சத்துருக்கள் விஷங் கலக்கக் கூடுமாகையால் அதைப் பரீக்ஷிப்பதற்காக அந்த இருவருக்கும் சாதம் படைப்பதும் அவர்கள் முந்திப் புசிப்பதும் வழக்கம். அவர்கள் போஜனஞ் செய்து இரண்டு நாழிகைக்குப் பிறகு அவர்களுக்கு விஷ உபத்திரவம் இல்லையென்று தெரிந்த பிறகு மகாராஜா சாப்பிடவேண்டும்” என்றார்கள். எனக்குத் தாளக்கூடாத பசியாயிருந்தாலும் விஷசோதனை செய்வதற்காக நான் வெகு நேரம் வரையில் அன்னத்தைத் தொடாமல் உட்கார்ந்திருந்தேன். பிறகு வாழை இலை போலத் தங்கத்தினாற் செய்யப்பட்ட இலையிலே அன்னமும் பலவகையான அறுசுவைப் பதார்த்தங்களும் படைக்கப் பட்டன. நான் போஜனஞ் செய்வதற்காக இலைக்கு முன்பாக உட்கார்ந்தேன். என் பக்கத்திலே பல ஸ்திரீகள் உட்கார்ந்து ஒரு ஸ்திரீ எனக்கு சாதம் ஊட்டவும், பல ஸ்திரீகள் பல கறிகளை எடுத்து என் வாயில் வைக்கவும் ஆரம்பித்தார்கள். நான் அவர்களை முனிந்துகொண்டு “ஒருவரும் எனக்கு ஊட்டவேண்டாம். நானே அள்ளிச் சாப்பிடுகிற வழக்கம்” என்று சொல்லி அதட்டினேன். அவர்கள் நடுநடுங்கிக் கொண்டு தூரத்திற் போய்விட்டார்கள். சகல விகாதங்களுந் தீர்ந்துபோய் விட்டபடியால் இனிமேல் அமரிக்கையாகப் புசிக்கலாமென்று நினைத்து சாதத்தை அள்ளி வாயில் வைத்தேன். உடனே இரண்டு வைத்தியர்கள் என் முன்பாக நின்றுகொண்டு “மகாராஜா! ராஜேந்திரா! அந்தப் பதார்த்தம் வாயு; இந்தப் பதார்த்தம் சூடு; அந்தக் கறி பித்தம்; இந்தக் கறி சீதளம்” என்று சொல்லி அநேக பதார்த்தங்களை நான் புசிக்காதபடி தடுத்தார்கள். நான் அவர்களுடைய வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் எனக்கு இஷ்டமான பதார்த்தங்களை யெல்லாம் பரிபூரணமாக உண்டு பசி தீர்த்துக் கொண்டேன். பிறகு நான் சுயம்பாகிகளைப்