பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XXX

இயற்றப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புதினக் கதைகளுக்கு இவைகளே முன்னோடிகளும் வழிகாட்டிகளுமாகும் இதனால் இவரைத் “தமிழ்ப் புதினத்தின் தந்தை” என்று போற்றுவதும் பொருத்தும்.

நீதி நூல்:

மக்களுக்கு நீதியை அறிவிக்கும் நூல்கள் தமிழ் மொழியில் பல உண்டு. அவற்றுள் திருக்குறள் பெரிதும் போற்றப்படுகிறது. ஆயினும், நீதிகளை அறிவிக்கும் நூல் எதுவும் தன் காலத்தில் தோன்றாமையை வேதநாயகர் நினைத்தார். கையூட்டு - இலஞ்சம் - போன்ற பிற்காலத்திய தீய பழக்கங்களைக்கடிய ஒரு நீதிநூல் தேவை என்பதையும் எண்ணினார். . காலத்திற்கேற்ற தேவையாகிய அத்தகைய நூலொன்றைத் தானே இயற்ற முன் வந்தார். தனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் செய்யுட்கள் இயற்றிச் சேர்த்தார். இறுதியில் 400 செய்யுட்கள் கொண்ட அந்நூலை,“நீதி நூல்” என்னும் பெயரில் 1859 இல் தான் சீர்காழியில் நீதிபதியாக இருந்தபோது வெளியிட்டார்.

அதளைப் படித்த மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார் உள்ளிட்ட, தமிழறிஞர் அனைவரும் அவரைப் பாராட்டினார்கள். மகா வித்துவான் அவர்கள், அதனை மேலும் சிறிது விரிவு செய்யக் கோரினார். ஆகவே, வேதநாயகர் மாயூரத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில் மேலும் 200 செய்யுட்களை எழுதிச் சேர்த்து, 600 பாடல்களைக் கொண்டதாகத் திருந்திய பதிப்பாக, 1860 இல் வெளியிட்டார். நீதிபதி, “நீதி நூல்“ இயற்றியது நிறை பொருத்தம் உடையதே!

கிறிஸ்து சமயச் சார்பு நூல்கள் :

வேதநாயகர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், வேலை போயிற்றேயென்று வேதனைப்படவில்லை. மாறாக, தனக்குத் தன் வாழ்நாள் முழுவதும் கருணை புரிந்து வந்த, மேலும்