பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

பிரதாப முதலியார் சரித்திரம்

களாக எண்ணவேண்டுமே யல்லாது, தன்னையும் ஜனங்களையும் பிரத்தியேகமாக எண்ணக்கூடாது. அப்படிப் பிரத்தியேகமாக எண்ணுகிற பக்ஷத்தில், தன்னைப் பார்க்கிலும் ஜனங்களையே விசேஷமாக எண்ணவேண்டும். ஒரு அன்புள்ள தகப்பன், தன் பிள்ளைகளுடைய சௌக்கியத்தின் மேலே நாட்டமாயிருப்பது போல் அரசனும் பிரஜைகளுடைய நன்மைகளையே எப்போதும் தேடவேண்டும். அரசன் நல்ல சட்டதிட்டங்களை உண்டுபண்ணி அந்தப்படி தான் முந்தி நடந்து வழிகாட்டவேண்டும். எப்போது யாவரும் காணும்படியான முகாரவிந்தத்தை உடையவனாகவும், அருள் பொழியாநின்ற கண்ணை உடையவனாகவும், ஜனங்களுடைய குறைகளைக் கேட்க எப்போது சித்தமாயிருக்கிற காதுகளை உடையவனாகவும், சத்தியமும் இன்சொல்லுங் குடிகொண்ட நாவையுடையவனாகவும் ஜனங்களுடைய பயத்தைத் தீர்க்கும் அபயாஸ்தங்களை உடையவனாகவும் பரஸ்திரீகள் காணாத மார்புடையவனாகவும் சத்துருக்கள் காணாத முதுகுடையவனாகவும் தர்மமே அவதரித்தது போன்ற நற்குண நற்செய்கைகளை உடையவனாகவும் அரசன் பிரகாசிக்க வேண்டும்.

ஜலமும் விவசாயத்தொழிலும் உலகத்துக்கு முக்கியமானதால், ஆறுகள், குளங்கள், ஏரிகள், பாய்க்கால்கள், வடிகால்கள் முதலியவைகளை நன்றாக வெட்டி வேளாண்மைக்குரிய சாதகங்களை அரசன் செய்து கொடுக்க வேண்டும். வியாபாரங்களும் பல தொழில்களும் கிரமமாய் நடக்கும்படி சர்வ ஜாக்கிரதை செய்யவேண்டும். பாலங்கள், மதகுகள், ரஸ்தாக்கள், சாலை மார்க்கங்கள் முதலியவைகளை உண்டாக்கி அவைகளை எப்போதும் செவ்வையான ஸ்திதியில் வைத்திருக்கவேண்டும். குருடர் முடவர் முதலிய அங்கஹீனர்களும் பாடுபடச் சக்தியில்லாத விருத்தர்களும் ஸ்திரீகளும் ரோகஸ்தர்களும் அநாதப் பிள்ளைகளும் பரம ஏழைகளும் வெளியே போய் பிக்ஷை