பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசயற்‌ கடமைகள்‌

277

எடுக்காதபடி தர்மசாலைகளை உண்டாக்கி அவர்களை அரசனே சம்ரக்ஷிக்கவேண்டும். வைத்திய சாலை, ஔஷதசாலை முதலியவைகளை ஊர்கள் தோறும் ஏற்படுத்தி ஏழைகளுக்குத் தர்ம வைத்தியஞ் செய்யும்படி தகுந்த வைத்தியர்களை நியமிக்கவேண்டும். வித்தியா சாலைகளை உண்டாக்கி அக்ஷராப்பியாசம், இலக்கணம், இலக்கியம், பூகோளம், ககோளம், கணிதம், பல தேச சரித்திரம் முதலியவைகளைப் படிப்பதுமன்றி சத்தியம், பிரமாணிக்கம், நீதிநெறி, தெய்வபக்தி, பரோபகாரம் முதலிய சன்மார்க்கங்களையும் கற்பிக்க வேண்டும். பணங் கொடுத்துப் படிக்க நிர்வாகமில்லாத பிள்ளைகள் இலவசமாகப் படிக்கும்படி அரசன் திட்டஞ் செய்யவேண்டும். பிள்ளைகளுக்குத் தேகப்பலமும் சௌக்கியமும் உண்டாகும்படி சிலம்பக் கூடம் முதலியவைகளை ஸ்தாபிக்கவேண்டும். சிற்பவேலை, நெசவுத்தொழில், தச்சு வேலை, கொற்றுவேலை முதலிய பல தொழில்களைக் கற்றுக்கொள்ள இஷ்டமுள்ளவர்களுக்கு உபயோகமாகும்படி பல தொழிற்சாலைகளை நிருமிக்கவேண்டும். மார்க்கங்களிலும் இன்னும் முக்கியமான இடங்களிலும் வழிப்போக்கர் தங்கும்படியாகச் சத்திரஞ்சாவடி முதலியவைகளை நிலைப்படுத்த வேண்டும். ஜனக்களுடைய வீடுகளும் தெருக்களும் சுத்தமாகவும் நாகரீகமாகவும் காற்று நடமாட்டமாகவும் இருக்கும்படி ஜாக்கிரதை செய்வதுமன்றி மல ஜல ஆதி அசுத்தங்களும் ஜனங்களுடைய பார்வையிற் படாதபடி அடிக்கடி அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

பெயர்ப்போன வித்தியா பாரங்கதர்களுக்கும் அருமையான தொழிலாளிகளுக்கும் அரசன் வெகுமதிகளும் உபகாரச் சம்பளங்களும் கொடுத்து அவர்களைக் கனப்படுத்த வேண்டும். அரசன் சாதுஜன மித்திரனாகவும் அசாத சத்துருவாகவும் இருக்கவேண்டும். அரசன் ஜனங்களை அறியாவிட்டால் அவர்களை எப்படி ஆளக்கூடும்? ஆகையால் அரசன் ஜனங்களுக்குள்ளே தானும்