பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

பிரதாப முதலியார் சரித்திரம்

மாட்டாமல், அவர்களுக்கு யார் பொருளை யெடுத்துக் கொடுக்கிறார்களோ, அவர்களையுந் தண்டிப்பது கிரமமாயிருக்கும். இங்கிலீஷ் ஆளுகையில், இலஞ்சங் கொடுத்தவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், இலஞ்சப் பிரியாது கொண்டு வர ஒருவருந் துணிகிற தில்லை. அப்படி யாராவது துணிந்தாலும், அதிகாரிகளுக்கு விரோதமாகக் சாக்ஷிகள் அகப்படுவது துர்லபமா யிருக்கின்றது. இலஞ்சப் பிரியாது உருசு வாகா விட்டால், பொய்ப் பிரியாது செய்த குற்றத்துக் காக. பிரியாதுக்காரன் வகையாகத் தண்டிக்கப் படுகிறது மன்றி அவன் எப்போதும் அதிகாரிகளினுடைய க்ஷாத்திரத்துக்குப் பாத்திரன் ஆகிறான். இவ்வகையாக, இலஞ்சம் வாங்கிகளுக்குப் பல சாதகங்களிருக்கிற படியால், அவர்கள் இலஞ்சம் வாங்குகிறதற்கு உத்தாரச் சீட்டுப் பெற்றுக் கொண்டது போல, நிர்ப்பயமாய்ச் சர்வ கொள்ளை யடிக்கிறார்கள். அதுவும் போதாதென்று, அவர்களுடைய ஆயுசு வரையில், அவர்களுக்குத் துரைத் தளத்தார் உபகாரச் சம்பளங்களையுங் கொடுக்கிறார்கள்.

லஞ்சம் கொடுக்கிறவர்களைத் தண்டிக்கிறதென்கிற விதியை நாம் பரிச்சேடம் அநுசரிக்கக்கூடாது. அன்றியும் ஒரு உத்தியோகஸ்தன் பரிதானம் வாங்குகிறானென்றாவது அல்லது வேறு பிரபலமான துஷ்கிருத்தியங்கள் செய்கிறானென்றாவது, பல பெயர்களுக்குப் பகிரங்கமாய்த் தெரிந்திருந்தால் அதைப் பற்றிப் பூரண விசாரணை செய்து கொண்டு அவன் மேலே பிரியாது வராமலிருந்தாலுங் கூட அவனை உடனே உத்தியோகத்தினின்று நீக்கி விட வேண்டும். அரசன் அயோக்கியமான உத்தியோகஸ்தர்களை எப்போதும் நன்கு மதித்து அபிமானிக்கவேண்டும். அவர்கள் மூப்பு ரோகம் முதலிய காரணங்களால் வேலை பார்க்க அசக்தர்களாயிருக்கும்போது அரசன் அவர்களுக்கு உபகாரச் சம்பளங்