பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற்‌ கடமைகள்‌

279

யங்கள் கற்பிக்கப் படாமல்,லௌகீக சம்பந்தமான சில காரியங்கள் மட்டுங் கற்பிக்கப்படுகிற படியால், அந்த பாடசாலைகளிற் கல்வி கற்கிற பிள்ளைகள், உலகாயதர்களாயும், நாஸ்திகர்களாயும், பரிணமிக்கிறார்கள். அவர்களுக்கு உத்தியோகமான உடனே, பணமே தெய்வமென்று நினைத்து, அதைச் சம்பாதிக்கிறதற்காகச் சகல அக்கிரமங்களையுஞ் செய்கிறார்கள். இங்கிலீஷ் துரைத்தனத்தாருடைய சட்டத்தில், இலஞ்சம் வாங்குகிறவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது போலவே. இலஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட் டிருக்கிறது. இலஞ்சம் வாங்குகிறவர்களுக்குச் சர்வாநுகூலமான சட்டம் இதைவிட வேறொன் றிருக்கக் கூடுமோ? திருட ருடைய இம்சைக்குப் பயந்து, அவர்களுக்குப் பொக்கிஷத்தின் திறவு கோலைக் கொடுப்பவர்கள் போல, உத்தியோகஸ்தர்களுடைய நிர்ப்பந்தத்தினால் அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறார்களே தவிர, அவர்களுக்கு மனப் பூர்வமாய் இலஞ்சம் கொடுக்கிறவர்கள் ஒருவருமில்லை. ‘அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியான வன் வீட்டு அம்மியை உடைக்கும்' என்கிற பழமொழிப்படி, அதிகாரிக்கு யார் மேலே துவேஷமிருக்கிறதோ, அவர்களைக் கெடுக்கிறதற்குப் பல சமயங்கள் நேரிடுகின்றன. வழக்கமாய் இலஞ்சம் வாங்குகிற அதிகாரிக்கு, எவன் இலஞ்சம் கொடுக்கவில்லையோ. அவன் அந்த அதிகாரிக்கு ஜன்ம சத்துரு வாகிறான். அவனுடைய வழக்குகளை யெல்லாங் கெடுத்து, மடி மாங்காய் போட்டு, கழுத் தறுக்க, அதிகாரி சமயந் தேடுகிற படியால், கைலஞ்சம் கொடுத்து, அவனுடைய தயவைச் சம்பாதிக்க வழக்காளிகள் உடன்படுகிறார்கள். இப்படிப் பட்ட நிர்ப்பந்தங்களினால் இலஞ்சங் கொடுக்கச் சம்மதிக்கிறார்களே தவிர, மனத் திருப்தியாக இலஞ்சம் கொடுக்கிறவர்கள் ஒருவருமில்லை. ஆகையால், இலஞ்சம் கொடுப்பவர்களைத் தண்டிப்பது நியாயமா யிருக்குமானால், திருடாகளுடைய தடியடியைப் பொறுக்க . .