பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

பிரதாப முதலியார் சரித்திரம்

அவன் அடி வைக்கும் இடமெல்லாம் படுகுழி. அவன் உண்ணூம் அன்னமே விஷம். அவனைச் சூழ்ந்திருப்பவர்கள் எல்லாரும் யம தூதர்கள். அவனுடைய அரண்மனையே மயானம். ஆகையால் கொடுங்கோல் மன்னர் உய்வதற்கு வழி இல்லை” என்று தேன்மழை பொழிவது போல ஞானாம்பாள் பிரசங்கித்தாள். நான் அளவற்ற ஆக்லாந்தடைந்து அவளைப் பார்த்து “நீ இவ்வளவு கையிருப்பு வைத்துக் கொண்டு அரசாளத் தெரியாதென்று சொன்னாயே! இப்போது உலகத்தில் அரசு செய்கிறவர்களுக்கு உனக்குத் தெரிந்த காரியங்களில் நூற்றில் ஒரு பங்கு கூடத் தெரியுமா?” என்றேன். அவள் என்னைப் பார்த்து “வாய்த்தைக்குத் தரித்திரமுண்டா? வாய்ப் பந்தல் போட யாராலே கூடாது? அரசன் நடக்கவேண்டிய நெறிகளைப் பற்றி நான் வாசா கைங்கரியமாகப் பேசினபோதிலும் பேசினபடி நடப்பதல்லவோ கஷ்டம்” என்றாள். நானும் ஞானாம்பாளும் ஒருவரையொருவர் சந்தித்த சந்தோஷத்தினால் நேரம் போவதுகூடத் தெரியாமல் நாங்கள் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது உதயபேரி முதலிய வாத்தியங்கள் முழங்கினபடியால் விடியற்காலம் ஆய்விட்டதென்று தெரிஅது கொண்டோம். உடனே ஞானாம்பாள் ஒரு அறைக்குள்ளே போய்ப் பெண் ரூபத்தை மாற்றிப் புருஷ ரூபந் தரித்துக் கொண்டு என் முன்பாக வந்தாள். அதற்கு முன் பெண்ணுக்குப் பெண் ஆசிக்கும்படியான அதிரூபவதியாயிருந்தாள். இப்போது ஆணுக்கு ஆண் அபேக்ஷிக்கும்படியான அழகிய புருஷ வேஷம் பூண்டுகொண்டு வந்தாள். அவள் சாக்ஷாத் புருஷ வடிவமாகவே யிருந்தபடியால் அவள் பெண்ணென்பதை மறந்துவிட்டு ““இந்த மகா புருஷனை மணஞ் செய்வதற்கு நாம் பெண்ணாய்ப் பிறக்காமற் போய் விட்டோமே”” என்று சற்று நேரம் மதிமயங்கி, பிற்பாடு தெளிந்து கொண்டேன்.