பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருவரும் பிரியாதிருக்க சூழ்ச்சி

283


39-ஆம் அதிகாரம்
உபராஜ நியமனம்—தேச பரிபாலனம்—
உத்தியோகச் சீர்திருத்தம்

நான், அருணோயதமாவதற்கு முன், ஞானாம்பாளைப் பார்த்து ““நீ மகா ராஜாவா யிருப்பதால், உன்னோடு கூட நான் சமான ஸ்கந்தமா யிருப்பதைப் பார்க்கிறவர்கள் விபரீதமா யெண்ணிக் கொள்வார்கள். நான் இன்னானென்று உண்மையைத் தெரிவிப்பதும் கூடாத காரியமாயிருக்கின்றது. நீயும் பொய் சொல்ல மாட்டாய். இந்தச் சங்கடங்களை யெல்லாம் யோசிக்கும் போது, நான் ஒரு இடத்தில் தனிமையி லிருப்பது உத்தமமென்று நினைக்கிறேன்”” என்றேன். அவள் என்னைப் பார்த்து “““மத யானை ஏறியும், திட்டி வாசலில் நுழைவது போல, நமக்கு ராஜபட்டம் கிடைத்தும், நாம் ஒருவருக்குப் பயப்பட வேண்டுமா? உங்களை மேலான இடத்தில் வைத்து, நான் கைகட்டிச் சேவிக்காமல் இந்த ராஜாங்க நிமித்தம் உங்களை எனக்குச் சமானமாக வைத்துக்கொள்ளும்படி நேரிட்டிருப்பது எனக்கு எவ்வளவோ மனஸ்தாபமாயிருக்கிறது. நீங்கள் அதைக்கூட ஜனங்கள் வித்தியாசமாய் நினைப்பார்களென்று சொல்லுகிறீர்கள். ஜனங்கள் எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். நான் இனிமேல் உங்களை ஒரு நிமிஷங்கூடப் பிரிகிறதில்லையென்று பிரதிக்ஞை செய்துகொண்டிருக்கிறேன். நான் இதற்குமுன் உங்களைப் பிரிந்துபட்ட துன்பம் போதாதா? இன்னமும் பிரியவேண்டுமா? நீங்கள் இன்னாரென்று மற்றவர்களுக்கு உண்மையைத் தெரிவிப்பது அசாத்தியமாயிருந்தாலும் நான் பொய்யும் சொல்லாமல் தக்கபடி சொல்லிச் சமாளித்துக் கொள்வேன்““” என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து “““ஓ மகாராஜாவே! உங்களுடைய கட்டளைப் பிரகாரம் நடக்கச் சித்தமா யிருக்கிறேன்““” என்று சொல்லிச் சிரித்தேன்.