பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

பிரதாப முதலியார் சரித்திரம்

அவளுடைய சிவந்த வாயைத் திறந்து பல்வரிசை தோன்றும்படியாக அவள் சிரித்தது எப்படி யிருந்ததென்றால், பவளப் பெட்டியைத் திறந்து அதிலிருக்கிற முத்துச் சரங்களை விரித்துக்காட்டினது போலிருந்தது.

அன்றையத் தினம் பட்டாபிஷேகமான மறு நாளானதால், மந்திரி பிரதானி முதலானவர்கள் வந்து, தரிசன மகாலில் ராஜ பேட்டிக்குக் காத்திருப்பதாக, உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். நானும் ஞானாம்பாளும், உயர்ந்த வஸ்திராபணங்களைத் தரித்துக் கொண்டு, தரிசனமாலுக்குப் போய்ச் சித்திராசனத்தில் வீற்றிருந்தோம். நான் ராஜாவோடு கூடச் சமானமா யிருப்பதைப் பார்த்தவர்கள் எல்லாரும் ஆச்சரியம் அடைந்து, என் முகத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். உடனே, ஞானாம்பாள் அவர்களை நோக்கிச் சொல்லுகிறாள்:- “என்னோடு கூட ஆசனத்தி லிருப்பவர் என்னுடைய அத்தை குமாரர். அவரும் நானும் ஒரே இடத்தில் பிறந்து ஒரே இடத்தில் வளர்ந்து ஒரே இடத்தில் கல்வி கற்று ஒரே இடத்தில் வாழ்ந்தோம். எனக்குப் பிராணன் அவர்தான்: அவருக்குப் பிராணன் நான்தான். எனக்கு அவரே பிரியர்: அவரே அன்பர். இளமைப் பருவமுதல் எனக்கு அவரே காவலர்: அவரே துணைவர். என்னை ஒருநாளும் பிரியாதவர், பிரிந்து, வெளிப்பட்டு, வந்துவிட்டதால், அவரைத் தேடிக் கொண்டு வந்த இடத்தில், எனக்குப் பட்டாபிஷேகங் கிடைத்தது. அவருடைய யோக்கியதையை நீங்களும் அறிவீர்கள். பொழுது விடியாதபடி முந்திப் பாடிப் பிறகு பொழுது விடியும்படியாகப் பாடினவர் இவர்தாம்”” என்றாள். இதைக் கேட்டவுடனே மந்திரி பிரதானிகள் எல்லோரும் ““ஆம்! ஆம்! இவர் மகா வரப்பிரசாதி. புண்ணியாத்மா. இவரை அரசராக நியமிக்கவேண்டுமென்பது அநேகருடைய கருத்தாயிருந்தது. இவர் மகாராஜாவுக்குச் சமீபப் பந்துவாயிருந்தது எங்களுக்குப் பரம சந்தோஷம்”” என்றார்கள். உடனே ஞானாம்பாள் அவர்களை