பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

பிரதாப முதலியார் சரித்திரம்

கிறதற்கு மார்க்கமில்லை என்றும் அந்த அவயவங்கள் அறிந்துகொண்டன. வயிற்றுக்கு இடுகிற அன்னம் தேகத்தின் அவயவங்களுக்கெல்லாம் பிரயோஜனமாவது போல அரசனுக்குக் கொடுக்கப்பட்ட வரிகள் ஜனங்களுக்கே உபயோகமாகிற படியால் “வரி கொடுக்கிற விஷயத்தில் ஜனங்கள் ஆடங்கம் செய்யக்கூடாது”” என்றார்கள்.

அந்தப் பிரசங்கிகள் மறுபடியும் ஜனங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:— ““இந்த ஊர் குடியரசா யிருந்த காலத்தில் நாம் பட்ட அவஸ்தைகளும், இப்போது நமக்கு உண்டாயிருக்கிற சௌகரியங்களும், நமக்குப் பிரத்தியக்ஷப் பிரமாணமாய்த் தெரிந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தர்ம ராஜாங்கம் இந்தப் பூமண்டலத்தில் எங்கேயாயினும் இருக்குமா? சில மூட ராஜாக்கள் செய்த அக்கிரமங்களை நீங்கள் கேள்விப்பட்டால் இப்போது நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகளென்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்! ஒரு சம்ஸ்கிருத வித்துவான் ““அநியாய பஞ்சகம்“ என்று ஐந்து ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். அவைகளுள் மூன்று சுலோகங்களை மொழி பெயர்த்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

அநியாய பஞ்சகம்

I. “அநியாயபுரி என்னும் பட்டணத்தை மூர்க்கராஜன் என்பவன் ஆண்டுகொண்டு வந்தான். அவன் எலி வேட்டைக்குப் போயிருந்தபோது அவனுடைய பத்தினியை ஒரு பாம்பு கடித்து விட்டதாகவும், விஷம் தலையில் ஏறினவுடனே அவளுக்குப் பிராணலயம் உண்டாகுமென்றும், அரண்மனை உத்தியோகஸ்தர்கள் மந்திரிக்குத் தெரிவித்தார்கள். விஷம் தலையில் ஏறாதபடி தலையை வெட்டிப் பத்திரமாய் வைத்திருக்கும்படி மந்திரி உத்தரவு செய்தான். அந்தப் பிரகாரம் ராஜபத்தினியின் தலை வெட்டப் பட்டது. பாம்பு ஒரு வீட்டில் நுழைந்து வெளிப்படாமல் இருந்தபடியால் அந்த வீட்டைக்