பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரி செலுத்துதல் அத்தியாவசியம்

297

செலுத்த வேண்டும். வரி வாங்காவிட்டால் அரசன் தேச காரியங்களை எப்படி நடத்தக்கூடும்? வேரில் விடப்பட்ட ஜலம் மரம் முழுவதும் பரவுவது போலவும் நாம் வயிறு நிரம்பப் புசிக்கும் உணவு ஜீரணித்துத் தேகம் முழுதும் வியாபிப்பது போலவும், அரசனுக்குப் பிரஜைகள் கொடுக்கிற வரிகள் பிரஜைகளுக்கே உபயோகமாகிறபடியால், அரசனால் விதிக்கப்பட்ட நியாயமான வரிகளைப் பிரஜைகள் நிராடங்கமாகச் செலுத்தவேண்டும்.

ரோமாபுரியில் பல வரிகள் ஏற்பட்டிருந்த காலத்தில் ஜனங்கள் வரி கொடுக்க மாட்டோமென்று நிராகரித்து ஊரை விட்டு வெளியே போய்விட்டார்கள். அவர்களை அழைத்து வரும்படி அகிரிப்பா என்னும் தளகர்த்தனை ஆலோசனைச் சங்கத்தார் அனுப்பினார்கள். அந்தத் தளகர்த்தன் ஒரு விசித்திரமான கட்டுக் கதையைச் சொல்லி ஜனங்களை வசியப் படுத்தினான். அஃதென்னவெனில்:—

“முற்காலத்தில் வயிற்றுக்கும் மற்ற அவயவங்களுக்குஞ் சடுத்தம் உண்டாகி அந்த அவயவங்களெல்லாம் ஒன்று கூடி வயிறு ஒரு வேலையுஞ் செய்யாமலிருப்பதால் இனிமேல் வயிற்றுக்காகத் தாங்கள் ஒரு பாடும் படுகிறதில்லையென்று பிரதிக்ஞை செய்து கொண்டன. கைகள் “ஒரு வேலையுஞ் செய்யோம்” என்று சும்மா இருந்தன. கால் “வயிற்றுக்காக ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டேன்” என்றது. வாய் “ஒன்றையும் புசிக்க மாட்டேன்”” என்றது. கண், காது முதலியவைகளும் தங்களுடைய தொழில்களைச் செய்ய நிராகரித்தன. இவ்வகையாக அந்த அவயவங்கள் செய்த பந்துக்கட்டு தங்களுக்கே தீங்காய் விளைந்தது. வயிற்றுக்கு ஆகாரமில்லாமையினால் கை சோர்ந்து, கால் அயர்ந்து, வாய் உலர்ந்து, கண் இருண்டு, காது அடைத்துத் தங்களுக்கே உபத்திரவம் உண்டானபடியால் வயிறு தான் பிரதானமென்றும், வயிற்றுக்கு ஆகாரங் கொடாவிட்டால் தாங்கள் ஜீவிக்-