பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

பிரதாப முதலியார் சரித்திரம்

அரசனுக்குக் குடிகள் தாழ்ந்திருக்க வேண்டியவர்களே யல்லாது அரசனுக்குக் கீழ்ப்படியாத குடிகள் க்ஷேமத்தை அடைவார்களா? யுமாதாவுக்குச் சுரமிருந்தால் கர்ப்பத்துக்குஞ் சுரம்ரு என்பது போல் அரசன் சுகமாயிருந்தால் மட்டும் ஜனக்களுக்கும் சுகமானதால், அவனுடைய க்ஷேமத்தை ஜனங்கள் எப்போதும் பிரார்த்திக்க வேண்டும். அரசனை வணக்கமாயும், மரியாதையாயும், பயபக்தியாயும் பூஜிதை செய்யவேண்டும். அரசனுடைய சுகதுக்கங்களைத் தங்களுடைய கண்ணிற் பட்டதாகவும் பிரஜைகள் எண்ணி எப்போதும் ராஜபக்தி செய்யவேண்டும். சூரியனிடத்தில் வெப்பமும், சந்திரனிடத்தில் களங்கமும், மேகத்தினிடத்தில் இடியும், புஷ்பங்களிடத்தில் முட்களுமிருப்பது போல, அரசனும் நம்மைப் போல் மனுஷனானதால் அவனிடத்திலே சில குண தோஷங்களிருப்பதும் சகஜம். அதற்காக அரசனை நாம் அவமதிக்காமல் நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னம் போல, அரசனுடைய குற்றத்தை நீக்கிக் குணத்தை மட்டும் கிரகித்துக் கொள்ளவேண்டும். அரசனுடைய செய்கைகளுக்கு நமக்குக்காரணந் தெரியாதபோது அவன் நல்ல எண்ணத்துடனே செய்ததாக ஊகிக்கவேண்டுமே தவிர, விபரீதமாக எண்ணக்கூடாது. அரசன் ஒரு அக்கிரமஞ் செய்தாலுங் கூட, அதைக் கிரமமான மனுமூலமாகப் பரிகரிக்கவேண்டுமே யல்லாது, ராஜத் துரோகத்தைக் கனவிலுஞ் சிந்திக்கக் கூடாது. ராஜ நிந்தையை நாமும் பேசக்கூடாது. பிறர் பேசவும் இடம் கொடுக்கக் கூடாது.

சத்துருக்களையும், துஷ்டர்களையும் அடக்கவும், நியாய பரிபாலனம் நடத்தவும், தேச நன்மைக் கடுத்த பல வேலைகளைச் செய்யவும், போது மான சதுரங்கச் சேனைகளையும், உத்தியோகஸ்தர் முதலியவர்களையும் நியமித்து, அநுபாலிக்க, அரசன் கடமைப்பட் டிருப்பதால், அதற் காக விதிக்கப்பட்ட வரிகளை ஜனங்கள் மனோற்சாக மாகச்