பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராஜ பக்தியின்‌ அவசியம்‌

295

தொழில்களை ஒவ்வொருவனுங் கற்றுக்கொள்வது அசாத்திய மாகையாலும், அந்தத் தொழிலாளிகள் உள்ள இடங்களில் வசிப்பது ஜனங்களுக்குப் பெரிய சௌகரியமாயிருக்கிறது. கூட்டுறவாய் வாழ்கிற ஜனங்கள், ஒருவருக்கொருவர் உபத்திரவம் செய்து கொள்ளாமலும், ஒருவருடைய சொத்தை ஒருவர் அபகரிக்காமலும் பாதுகாப்பதற்காகவும் இன்னும் தேசோபகார மான பல நன்மைகளைச் செய்யவுமே, ஒவ்வொரு தேசத்திலும் ராஜாங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஜனங்கள் தங்கள் நன்மைக்காக அரசனை நியமித்துக் கொண்டி ருப்பதால் அரசனுடைய கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியது அகத்தியமா யிருக்கிறது. ஒரு சிறிய குடும்பத் தலைவன் சொற்படி நடவாத குடும்பஸ்தர்கள் துன்பம் அடைவார்களானால், அனந்தங் குடும்பங்களுக்குத் தலைவனாகிய அரசன் சொற்படி கேளாதவர்கள் எப்படி க்ஷேமம் அடைவார்கள்? உலக மாகிய உடலுக்கு அரசன் தலையாகவும் பிரஜைகள் பல அவயவங்களாயு மிருக்கிறார்கள். எண்சாணுடம்பிற்கும் சிரசே பிரதானமாயிருப்பது போல், உலக மாகிய உடலுக்கு அரசனே பிரதானமா யிருக்கிறான். தலையில்லாத சரீரம் எப்படி ஜீவிக்காதோ அப்படியே அரசனில்லாத தேசம் நாசத்தையும் அடையும்.

சகல சாஸ்திரங்களும், புராணங்களும், சமய நூல்களும் அரசனை விசேஷமாகச் சொல்லுகின்றன. அரசன் ஜனங்களால் நியமிக்கப்பட்டவனா யிருந்தாலும் அவன் சகலருக்கும் மேலான புருஷ ஸ்ரேஷ்டனென்று சகல தேசங்களிலும் நன்கு மதிக்கப் படுகிறான். சூரியன் உயர்வான இடத்திலிருந்து பிரகாசியா விட்டால் உலகம் ஒளி பெறுமா? மேகம் மேலான இடத்திலிருந்து வருஷியாவிட்டால் உலகத்துக்குப் பயன்படுமா? ஆறு குளங்கள் உயர்வாகவும், வயல்கள் தாழ்வாகவும் இருந்தால் மட்டும் ஜலம் பாயுமே யல்லாமல், ஆற்றைப் பார்க்கிலும் உயர்வாயிருக்கிற கழனிகளுக்கு ஜலம் பாயுமா? அப்படியே