பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

பிரதாப முதலியார் சரித்திரம்

ஒத்திருந்தாலும், இரண்டொரு விஷயக்களில் நானும் அவளும் பின்னாபிப்பிராயப் பட்டோம். ராஜாங்க வருமானத்தைப் பார்க்கிலும் செலவு அதிகரித்துப் பணம் போதாமலிருந்தபடியால், ஜனங்களிடத்தில் அதிக வரி வசூல் செய்யவேண்டுமென்பது என்னுடைய கருத்தாயிருந்தது. ஞானாம்பாள் என்னுடைய அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்ளாமல் என்னைப் பார்த்துச் சொல்கிறாள்:— ““ஜனங்களுக்கு நியாயமாக எவ்வளவு வரி ஏற்படுத்தக்கூடுமோ அவ்வளவு வரி முன்னமே ஏற்பட்டிருப்பதால் நாம் செலவைக் குறைக்க மார்க்கம் தேடவேண்டுமே யல்லாது, ஜனங்களுடைய தலை மேலே அதிக வரிகளைச் சுமப்பது தர்மமல்ல. “சுண்டைக்காய் காற் பணம், சுமைக்கூலி முக்காற் பணம்“ என்பது போல, அநேக உத்தியோகஸ்தர்களுக்கு வேலை குறைவ யிருக்க, அவர்களுக்கு அபரிதமான சம்பளங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த பூலோகத்தில் ஒரு ராஜாங்கத்திலும் இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வில்லை. கோட்டை போல நாலு பக்கத்திலும் மலைகளுங் கடலுஞ் சூழ்ந்திருக்கிறது. இந்த நாட்டுக்குச் சத்துரு பயமென்கிற பிராந்தியே யில்லாமலிருக்க, எண்ணிறந்த ரத கஜ துரக பதாதிகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நாம் சம்பளம் கொடுப்பது அக்கிரமமல்லவா? அன்றியும் மராமத்து டிபார்ட்மெண்டு என்கிற ஒரு பெரும் பூதமானது நம்முடைய பொக்கிஷப் பணங்களையெல்லாம் புசித்து விடுகின்றது. அநாவசியமான செலவுகளையெல்லாம் குறைத்து விட்டால் நம்முடைய வருமானம் செலவுக்கு மேல் மிஞ்சிக் கையிருப்புக்கும் இடம் உண்டாகும். சம்பளங்களைக் குறைப்பது உத்தியோகஸ்தர்களுக்கு அதிருப்தியா யிருக்குமென்பது நிச்சயந்தான். ஆனால் சில உத்தியோகஸ்தர்களுடைய திருப்திக்காகக் கோடானுகோடி ஜனங்களுடைய சௌக்கியத்துக்கு நாம் குறைவு செய்யலாமா?”” என்றாள். ஞானாம்பாள் சொன்ன நியாயங்கள் மறுக்கக்கூடாதவைகளா யிருந்த-