பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியாயவாதிகள்‌ கொடுமை

309

சில வக்கீல்கள் பல ஜில்லாக்களில் வழக்குகளை வாங்கிக் கொண்டு பூப் பிரதக்ஷணஞ் செய்து வருகிறார்கள். அவர்களைக் காலையில் காசியிற் பார்க்கலாம்; மத்தியானத்தில் மதுரையிற் பார்க்கலாம்; அந்தி நேரத்தில் அயோத்தியிற் பார்க்கலாம். அவர்கள் ஆசையையே இறகாகக் கொண்டு பக்ஷி போற் பறந்து திரிகிறார்கள். அவர்களுக்கு ரயில் வண்டி வேகமும் போதாமையினால் தந்தி தபால் வழியாகப் பிரயாணம் செய்யக் கூடாமலிருப்பதற்காகச் சர்வதா விசனப் படுகிறார்கள். இந்த விசுவ சஞ்சாரிகளிடத்தில் வியாஜ்ஜியங்களைக் கொடுப்பதைப் பார்க்கிலும் சகல அஸ்தாந்தரங்களையும் அக்கினிக்குத் தத்தம் செய்துவிடுவது நன்மையா யிருக்கும். ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்குப் போகிற வக்கீல் தனக்காக வேறொரு வக்கீலை ஆஜராகும்படி சொல்லிவிட்டுப் போவது வழக்கமாயிருக்கிறது. இந்த வழக்கம் யாரால் எக்காலத்தில் ஏற்பட்டதென்பது ஒருவருக்குந் தெரியாது. ஒரு வக்கீல் கக்ஷிக்காரனிடத்தில் பீஸ் வாங்கிக் கொண்டு, அவனுடைய வழக்கு முழுமையும் தானே சுயமாக நடத்துவதாக ஒப்பபுக்கொண்டிருக்க, அந்த உடன்படிக்கைக்கு விரோதமாக அந்த வக்கீல் வேறொரு வக்கீலை எப்படி நியமிக்கக் கூடும்? கவர்ன்மெண்டாரால் நியமிக்கப் பட்ட உத்தியோகஸ்தன் சுயமே வேலை பாராமல் தன்னுடைய ஸ்தானத்தில் வேறொரு உத்தியோகஸ்தனை நியமிக்கக் கூடுமா? ஒரு காரியஸ்தன் எசமானுடைய உத்தரவில்லாமல் தனக்குப் பதிலாக வேறொரு காரியஸ்தனை நியமித்துவிட்டு நினைத்தபடி திரியலாமா? இந்த வினாக்களுக்கு யாவரும் எதிர்மறையாக உத்தரம் சொல்லுவார்களென்று நம்புகிறோம். அப்படியானால் ஒரு கக்ஷிக்காரனால் நியமிக்கப் பட்ட வக்கீல் தனக்காக ஆஜராகிப் பேசும்படி வேறொரு வக்கீலுக்கு எப்படி ஆதாரம் கொடுக்கக் கூடும்? ஒரு வக்கீல் சம்பந்தப்பட்ட வழக்கைக் கோர்ட்டார் விசாரிக்கப் போகிற தற்சமயத்தில், அந்த வக்கீல் வேறொரு வக்கீலை நியமித்து விட்டுப் போகிற-