பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

பிரதாப முதலியார் சரித்திரம்

வேண்டுமென்றும் அதிகாரிகள் ஒரு பக்கத்தில் நிர்ப்பந்தித்தார்கள். ஞானாம்பாள் வியாதியாயிருக்கும்போது அவளுக்கு எங்கள் கையாலே பக்குவங்கள் செய்யக் கூடாமலும் அவள் இறந்த பிறகு அவள் முகத்திலே கூட விழிக்கக் கூடாமலும் அவளுடைய பிரேதத்தையாவது எங்கள் கையிலே எடுத்து அடக்கஞ் செய்வதற்குக் கூட இடமில்லாமலும் போய்விட்டதால் நாங்கள் பட்ட துயரம் இவ்வளவு என்று விவரிக்க ஒருவராலும் கூடாது. நான் உடனே மெய்சோர்ந்து மூர்ச்சித்து ஸ்மரணை தப்பிப் போய்விட்டேன். அப்பால் நடந்தது யாதொன்றும் எனக்குத் தெரியாது. சத்தியபுரிக்குப் போனபிறகு தான் எனக்கு மயக்கந் தெளிந்து நல்ல நினைவு வந்தது. அப்போது என் தாய் தந்தையர் முதலானவர்கள் எல்லோரும் என் படுக்கையைச் சுற்றி அழுதுகொண்டு நின்றார்கள். நான் கண்ணை விழித்த உடனே என் தாயாரைப் பார்த்து யுஞானாம்பாள் எங்கே அம்மா?” என்றேன். அவர்களும் மற்றவர்களும் ஒன்றுஞ் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுதார்கள். நான் மறுபடியும் மெய்சோர்ந்து மெய் கலங்கி அறிவு தடுமாறித் துக்கித்தேன். எங்களுடைய வீட்டில் ஞானாம்பாள் இருந்த இடத்தையும் அவள் கட்டின வஸ்திரங்களையும் அவள் படித்த புஸ்தகங்களையும் மற்றச் சாமான்களையும் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கரைந்தேன். சத்தியபுரியில் உள்ளவர்கள் எல்லாரும் நித்தியமும் வந்து ஞானாம்பாள் ரகசியத்திலே செய்து வந்த தானங்களையும் தருமங்களையுஞ் சொல்லிச் சொல்லி, எங்களுடைய துக்கங்களைப் புதுப்பித்தார்கள். ஞானாம்பாளை நினைத்து அழாதவர்கள் ஒருவரும் இல்லை. ஏழைகள் எல்லாரும் “““எங்களுடைய இரக்ஷகி போய்விட்டாளே!““” என்று ஏங்கினார்கள். செல்வர்கள் எல்லாரும் “எங்கள் சீமாட்டி போய்விட்டாளே!” என்று தேம்பினார்கள். மாதர்கள் எல்லாரும் ““எங்கள் மனோன்மணி போய்விட்டாளே!”” என்று மயங்கினார்கள். புருஷர்கள் எல்-