பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

கமாகச் சாரி போனான். அவனுடைய குதிரை எதையோ கண்டு, வெருண்டு மார்க்கத்தை விட்டுக் காட்டிலும் மேட்டிலும் ஓடி அவனைக் கீழே தள்ளிவிட்டது. அவன் காயப்பட்டு பிரக்ஞால பங்கமாய் விழுந்த இடத்திலே பிரேதம் போலக் கிடந்தான். அப்போது அவ்விடத்தி லிருந்தவர்கள், "அவன் யாரோ பக்கிரி, அவனைத் தொட்டால் ஜாதிப்பிரஷ்டத்துவம் உண்டாகும்" என்று சொல்லிக் கொண்டு, அப்பால் விலகிப் போய்விட்டார்கள். என் பாட்டனார் மட்டும் "அவன் யாராயிருந்தாலும் ஆபத்து வேளையில் உதவ வேண்டும்" என்று நினைத்து அவனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு, அவனுடைய காயங்களைக் கட்டி, அவன் மூர்ச்சை தெளியும்படியான பக்குவங்களைச் செய்தார். அவன் மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடனே என் பாட்டனாரைப் பார்த்து, "நீர் செய்த உபகாரத்துக்கு ஏழைப் பக்கிரியான நான் என்ன பிரதி உபகாரஞ் செய்யப் போகிறேன்" என்று பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்தான். உடனே என் பாட்டனார் "பிரதி உபகாரத்தை விரும்பி இந்த உபகாரத்தை நான் செய்ய வில்லை; ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கு உதவுவது எவ்வளவோ பெரிய சுகிர்தம்; அந்தச் சுகிர்த பலனே எனக்குப் போதும்; இம்மையில் நான் வேறு பிரதிப் பிரயோஜனத்தை அபேக்ஷிக்கவில்லை" என்றார். அந்தத் துலுக்கன் என் பாட்டனாரைப் பார்த்து "இம்மையிலும் உமக்கு அல்லா கிருபை செய்வார்" என, என் பாட்டனார் "நித்தியமான மறுமைப் பலனை நான் அபேக்ஷிக்கிறேனே தவிர இம்மைப் பலனை அபேக்ஷிக்கவில்லை" என்றார். உடனே அந்தத் துலுக்கன் எழுந்து "நான் சொல்லுவதை நீ ஆக்ஷேபிக்கிறாயா?" என்று கோபித்து, என் பாட்டனார் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டு, குதிரையின் மேல் ஒரே தாண்டாய்த் தாண்டி ஏறிக்கொண்டு போய்விட்டான். அவ்விடத்தில் இருந்தவர்கள் எல்லாரும் என் பாட்டனாரை நோக்கி, "அந்த துஷ்டத் துலுக்கனுக்கு நீர் உபகாரஞ் செய்தற்குக் கைமேல் பலன் கிடைத்ததே" என்று