பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

தமிழ் இலக்கியம் காலந்தோறும் புதுப்புது வளர்ச்சியைப் பெற்று வருகிறது. அதன் வளர்ச்சிக்கு வளம் கூட்டிய படைப்பாளிகள் பலர்; அவர்கள் படைத்த படைப்புகளும் பல. அப்படைப்புகளைப் போலவே, அவற்றின் ஆசிரியர்களின் பெயர்களும் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன. அம்முறையில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, தமிழுக்கு வளமை சேர்த்த சிலருள் சிறந்தவராக ‘நாவல்’ என்னும் புதுமை இலக்கியத்தைத் தோற்றுவித்த மாயூரம் ச வேதநாயகம் பிள்ளை விளங்குகிறார்.

தமிழ் நாவல் முன்னோடியான வேதநாயகம் பிள்ளை ’பிரதாப முதலியார் சரித்திர’த்தை 1879-ம் ஆண்டு முதன் முதலில் வெளியிட்டார். அந் நாவலே தமிழில் ’நாவல்’ என்ற இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல் எனப் போற்றப்படுகிறது.

இந்நாவலின் நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில், பத்திரிகைகளும் நிறுவனங்களும் சிறப்பு வெளியீடுகளை வெளியிட்டுத் தத்தம் தமிழன்பைப் புலப்படுத்தி உள்ளன.

தாய்மொழியின்மீது — இலக்கியத்தின்மீது — அதைப் படைத்த படைப்பாளியினமீது நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த நம்மால் இயன்ற ஒரு சிறு செயலையேனும். ’ஒல்லும் வகையில் செல்லும்வாய் எல்லாம்’ செய்தால்தான் மனம் நிறைவு அடைகிறது; உலகிற்கும் பயன்படுகிறது இவ்வகையில் முதல் நாவலாசிரியரான வேதநாயகம் பிள்ளையின் மகன் வழிப்பேரன் என்ற முறையில், இம்முதல் நாவலை மறுபதிப்பாக வெளியிட முன்வந்துள்ளேன். ஆசிரியர் வெளியிட்ட முதல் பதிப்புக்குப் பின் பல பதிப்புக்களை இந்நாவல்