பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடன்‌ பிறந்தான்‌ துரோகம்‌

41

சகல சங்கதிகளும் விசிதமாகும்; தங்களுக்கு நான் செய்த துரோகத்துக்காக என் மனச் சாக்ஷி எனக்குச் செய்த தண்டனை சாமானியம் அல்ல; என் வியாதிக்கும் மரணத்திற்கும் காரணம் என் மனச் சாக்ஷியேயன்றி வேறல்ல. இனி எழுத எனக்குச் சக்தி இல்லை; சாகப் போகிற என்மேலே கோபம் வைக்க வேண்டாம்" என்று எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை நான் வாசித்த உடனே ஒரு பக்கத்தில் பெரிய ஆச்சரியமும், ஒரு பக்கத்தில் என் கனிஷ்டன் மேலே பிரதாபமான கோபமும் ஜனித்து, இன்னது செய்கிறதென்று தெரியாமல் சற்று நேரம் சித்திரம் போல அசைவற்றிருந்தேன். பிறகு பிள்ளை ஜீவந்தனாயிருக்கிறானே, அவனைக் காணலாமென்கிற சந்தோஷம் மேலிட்டு, சந்நியாசியார் வந்திருக்கிறாராவென்று விசாரித்தேன்; அவர் வந்திருக்கிறதாகக் கேள்விப்பட்டு அவரை ரகசியமாக அழைத்து, அவர் மூலமாகச் சகல சங்கதிகளையும் பரிஷ்காரமாக அறிந்து கொண்டேன். என் தம்பியினுடைய உத்தரக்கிரியைகளெல்லாம் முடித்துக் கொண்டு நானும் என் பத்தினியும், பரிவாரங்களும் புறப்பட்டு வந்து, என் பிள்ளையையும் உங்களையும் கண்டேன்; ஆனந்தங் கொண்டேன். இப்படிப்பட்ட பிரமானந்தத்தை நான் பிறந்தது முதல் ஒருநாளும் அநுபவித்ததில்லை; ஆனால் இதுவெல்லாம் மெய் தானோ, அல்லது கனவோ என்கிற சந்தேகம் ஒன்று மத்தியில் போராடுகிறது; முந்தி நாம் பார்த்த காரியங்களைக் கனவில் காணுகிறதே யல்லாமல், பாராத காரியங்களைக் கனவில் காணக்கூடுமோ? இந்த ஊரையும், ராஜ கிருஹங்களுக்குச் சமானமாகிய உங்கள் கிருஹங்களையும், அவைகளின் நானாவித அலங்காரங்களையும் மகா புண்ணியாத்துமாக்களான உங்களையும், இதற்குமுன் நான் ஒருநாளும் பாராதிருக்க இப்போது நான் பார்க்கிறபடியால் இவ்வளவும் கனவல்ல, உண்மையென்றே நிச்சயிக்-