பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

ஒரு வரம்பு உண்டா? அவருடைய தயவைப் பெற எத்தனையோ ஸ்திரீகள் தவஞ்செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் சிந்திக்காமல் உனக்கு அவருடைய கிருபை கிடைத்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! இனி இந்த நாட்டுக்கெல்லாம் நியே அரசி! சமஸ்தான காரியங்களெல்லாம், உன்னுடைய ஏவலின்படியே நடக்கும். ஆகையால் அவருடைய இஷ்டபூர்த்தி செய்து, அஷ்ட ஐசுவரியங்களையும் கைக்கொள்ளு!" என்றார்கள். இதைக் கேட்டவுடனே கற்பலங்காரிக்கு கோபமுண்டாகிச் சொல்லுகிறாள். “எனக்கு அரசரும், குருவும், தெய்வமும் என்னுடைய பர்த்தாவே அன்றி வேறல்ல; அவருடைய கிருபையே எனக்கு ஐசுவரியம்! அவருக்கு முன்பாக மற்ற அரசர்கள் எல்லாரும் அஜகஜாந்தரம்; உங்கள் அரசருடைய கிருபைக்காகத் தவஞ் செய்கிற ஸ்திரீகளே அந்தக் கிருபையைப் பெற்றுக்கொள்ளட்டும். எனக்கு வேண்டாம்!" என்றாள்.

"மறுபடியும் அவர்கள் அந்த உத்தமியின் புத்தியைக் கலைக்கிறதற்குச் சகல தந்திர வித்தைகளை உபயோகப் படுத்தியும், அவள் இசையவில்லை; அவர்கள் உடனே புறப்பட்டுப் போய், அரசனுக்கு நடந்த காரியங்களைத் தெரிவித்தார்கள். அவள் நிராகரித்த சங்கதி தெரிந்தவுடனே, அவனை அதிக அதிகமாக ஆசைப்பேய் பிடித்து ஆட்டத் தலைப்பட்டது. அவளைப் பலாத்காரமாகக் கொண்டு போகிற பக்ஷத்தில், தன்னுடைய சகோதரி மங்கம்மாளுக்குத் தெரிந்தால், தன்னைச் சிரசாக்கினை செய்வாளென்று பயந்து அவன் பலாத்காரஞ் செய்யத் துணியவில்லை. பணமென்றால் பிணமும் வாயைத் திறக்குமானபடியால், பணத்தைக் கொண்டே, அவ்ளை வசியஞ் செய்யவேண்டுமென்று நினைத்து, அவன் ஒரு பெரிய பெட்டியில் தங்க நாணயங்களையும் வேறொரு பெட்டியில் ரத்னாபரணங்களையும் நிரப்பி, அந்தத் தூதிகள் கையில் கொடுத்து, அவளிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் அந்தப் பெட்டி-