பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பலங்காரி வரலாறு

53

தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். "அப்படியே சொல்லுகிறேன்" என்று என் தாயார் சொல்லத் தொடங்கினார்கள்.

"சில காலத்துக்கு முன் திரிசிரபுரத்தில் அரசு செய்து வந்த விஜயரங்க சொக்கலிங்க நாயகர் சந்ததி யில்லாமல் இறந்து போனபடியால், அவருடைய பத்தினியாகிய மங்கம்மாளுக்குப் பட்டாபிஷேக மாகி, அவள் துஷ்டநிக்கிரஹம் சிஷ்ட பரிபாலனஞ் செய்து, மநுநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தாள். அவளுக்குக் காமியப்ப நாயக்கன் என்கிற பெயருடைய தம்பி ஒருவன் இருந்தான். மங்கம்மாளுக்குத் தம்பி மேலிருந்த பிரியத்தினால், தன்னுடைய நாட்டில் சில ஊர்களைப் பிரத்தியேகமாய்ப் பிரித்து இவனுடைய ஸ்வாதீனப்படுத்தி, தனக்குள்ளாக அவன் சிற்றரசாயிருந்து அரசாட்சி செய்யும்படி திட்டம் செய்தாள். அவன் புதுக்கோட்டையைத் தனக்கு ராஜதானி ஆக்கிக்கொண்டு, அரசாட்சி செலுத்திவந்தான். அவனுக்கு மகோன்னத பதவி கிடைத்த உடனே மதிமயங்கி, சமஸ்தான காரியங்களை எவ்வளவும் கவனிக்காமல் காமாதுரனாய்ப் பரஸ்திரீ கமனம் முதலிய துர்விஷயங்களிற் காலத்தைச் செலவளிக்கத் தலைப்பட்டான். அவனுக்கு ஆஸ்தான உத்தியோகஸ்தர்களில் ஒருவனாகிய மங்களாகரம் பிள்ளையினுடைய பத்தினி கற்பலங்காரி என்பவள், திவ்விய சுந்தரமும் அவளுடைய பெயருக்குத் தகுந்த சுகுணமும் உள்ளவளாயிருந்தாள். அவளிடத்தில், அந்த துஷ்டராஜனுக்கு மோகம் உண்டாகி அவளைத் தன் கைவசப்படுத்தும் பொருட்டு, அவளிடத்துக்குச் சில ஸ்திரீகளைத் தூதாக அனுப்பினான். அவர்கள், அவளுடைய புருஷன் வீட்டி லில்லாத சமயம் பார்த்து, அவளிடஞ் சென்று "அம்மா! நீ செய்த தவ மகிமையினால் உனக்கு ராஜயோகம் வந்துவிட்டது! உன்னைப்போல் அதிர்ஷ்டசாலிகள் உண்டா? நம்முடைய அரசரே உன்னுடைய அழகை விரும்புவாரானால் உன்னுடைய பாக்கியத்துக்கு