பக்கம்:பிராயச்சித்தம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 117 நாக்குக்குப் பேச்சு ஒண்ணுதான் மிச்சம், அதையும் அடக்கிவிட்டான். லேசாய், மணிக் கணக்கில் கிழக்கைப் பார்த்துக்கொண்டு, அசைவற்று அப்படி வேறு யாரால் உட்கார்ந்திருக்க முடியும்? அப்படியெல்லாம் இருக்கணும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால் எல்லாராலும் முடிகிற காரியமா? அப்போது என்னத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்? எதை நினைத்துக் கொண்டிருந்திருப்பார்? தன்னையே தின்று கொண்டிருந்தாரா? மிச்சப்போதுக்கு எழுதிக்கொண்டிருப்பார். தேவ நாகரி. நோட்புக், நோட்புக்காகக் குவித்துக் கொண்டிருந்: தார். ஒன்றிரண்டாவது ஞாபகார்த்தத்துக்கு மணியிடம்? ஊஹாம். ஆத்திரம் பிடித்தவன் போகி கொளுத்தியிருப் பான். பெரியப்பா என்னிடம் கனிவாயிருந்தது அவனுக்கு எப்பவுமே ஆகாது. தாய் தகப்பனில்லாதவன், தருமச் சோறு தர்மராஜன், எதிர்த்துப் பேச எனக்கு வாயேது? கோவில் பூஜை தவிர வீட்டில் சின்ன மர விமானத்தில் ராஜராஜேஸ்வரி பிரதிஷ்டை. நவராத்திரியில் இரண்டு வேளையும் அபிஷேகமும் ஸஹஸ்ரநாமமுமாக அமர்க் களப்படும். அப்புறம்தான் பெரியப்பாவுக்கு அன்றைய தினத்தின் ஒரே வேளை முழு ஆகாரம், இரண்டு வாழைப் பழம், ஒரு தம்ளர் பால். எப்போது பார்த்தாலும் அவள்மேல் ஏன் இப்படி ஒரு வேட்கை? உனக்காச்சு எனக்காச்சு பலப்பரீட்சையா? இல்லை, உள்ளே விட்டால் எனக்கு வேறேது கதியென்று சரணாகதியா? இல்லை பெரியப்பா, பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து ருசி கண்டுவிட்டாரா?