பக்கம்:பிராயச்சித்தம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 119 என்னைப் போவென்று அவர் சொல்கிற முறை அது போலும். இனி இங்கிருந்து உனக்காக வேண்டியது ஒன்று மில்லை. அவர் விளக்கும் முறை அது. அடுத்த நாளே கிளம்பிவிட்டேன். இன்னும் என் ப்ரக்ஞையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இப்படிச் சாண் ஏறாமலே, முழம் முழமாகச் சறுக்கிக்கொணடே போவதா? பெரியப்பா தாங்கள் இப்போது எங்கிருத் தாலும் என்னைக் கை தூக்குங்கள். கை தூக்கிக் கொள்ளுங்கள். ஊர்களில் திரிந்த நாட்களில் திரியும் நாட்களில் வாழ்க்கையின் மேடுபள்ளங்களுக்கேற்ப, கட்டிலில் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு எனக்கு நடந்ததையெல் லாம் எண்ணிப் பார்க்கையில், பெரியப்பா என்ன பேசி னார்? என்ன அர்த்தம்? என்ன மனதில் வைத்துக்கொண் டிருந்தார்? கூடவே தாய்ப்பாசம், தந்தை பாசம், பிள்ளைப்பாசம், பெண் பாசம் என்கிறோமே? அதில் சற்றேனும் உண்மையிருக் கிறதா? இல்லை மனிதசத்ததி, தலைமுறை தலைமுறை யாகத் தனக்குத்தானே முட்டிக்கொண்டு அதனாலேயே உண்மைப் படுத்திக் கொள்ளும் வெறும் கிசுகிசுப்புத் தானா? ஆனால் மிருகங்களுக்கு அது இருக்கிறதே, அது எப்படி? மிருகங்களிடம் அது உண்மை, மனிதனிடம் பொய்யா? ஆறு அறிவு கண்ட மிச்சம் இதுதானா? நீண்ட பெருமூச்சு ஒன்று தன்னிடமிருந்து புறப்படு வதை உணர்ந்தார். தொப்புளிலிருந்து கிளம்பி உடலின் அத்தனை நரம்புகளிலிருந்து அவைகளின் பலத்தை உருவிக்கொண்டு புகைபோக்கு போல் பிராணனிலிருந்து