பக்கம்:பிராயச்சித்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 17 சாய்வு நாற்காலியில் (பக்கத்துக் குடித்தனத்திலிருந்து இரவல்) அவள் காலடியில் போல, அருகே, தரையில், பையன் எப்பவோ துரங்கிவிட்டான். வாடைக்காற்றின் ஜிலு ஜிலு, தலை, தலைமயிர்க்கால் களினூடே, நெற்றி, கண் இமைகளை, கழுத்தை ஒற்றி எடுத்தது. மனமே அடைந்த அந்த ஒத்தட நிறைவில், மோனம் அவர்கள்மேல் திரையிறங்கிற்று, அதன் மணிச்சரங்கள், அவர்கள் மனித இதவின் எதிரொலியாக, நெஞ்சுக்கு மட்டுமே கேட்கும் கிளுகிளுப்பில் ஒன்றோ டொன்று உராய்ந்தன. இந்தத் தளிர் அமைதி நெடுநேரம் தாங்காதென அது உறுகையிலேயே, மேல் அதன் தவழ்தலிலேயே தெரிந்தது. ஆயினும் கிடைத்தவரை... f : * ’”örr序 இமைகள் திறக்க மனமில்லாமலே, புருவங்கள் லேசாக உயர்ந்தன. "நீங்கள் இளைச்சிருக்கேள்னுகூடச் சொல்ல மாட்டேன். என்னிக்குமே ஒத்தை நாடிதானே! ஆனால் நிறம் சத்தே மட்டாக் காட்றது. ஒரு தோல் வயண்ட மாதிரி தளிர் வெண்சிவப்பாயிருப்பேளே!' 'அப்படியா? அதெல்லாம் பற்றி எப்பவுமே நான் எண்ணிப் பார்த்ததில்லை. ஆமாம், இனிமேல் நான் கறுத்தால்தான் என்ன?” متممی 'அப்படியா, இயல்புன்னு ஒண்னு இருக் கோன்னோ 'இருக்கலாம். எப்படியும் மூனரை வருஷம் சிறை வாசம் ஆக்சே! எப்படியும் அந்த அடையாளம் காட் டாமல் இருக்குமா?" பி.-2