பக்கம்:பிராயச்சித்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 23 சற்றுநேரம் இருவரும் அவரவர் சிந்தனையில் ஆழ்ந் திருந்தனர். பிறகு அவள், பலவீனமான குரலில், நீங்கள் எனக் காக ஏற்றுக்கொண்ட தண்டனைக்கு எப்படிப் பிராயச் சித்தம் செலுத்தப் போறேனோ தெரியவில்லை.” "இந்தப் பேச்சு அலுப்புத் தட்டுகிறது கோமதி, விடு.” மறுபடியும் மெளனம். "பட்டணத்தில் இப்படி ஒரு இடம் கிடைப்பது ஆச்சர்யம். எங்கே இதைப் பிடித்தாய் கோமதி. ஒரு வண்டி சத்தம்கூடக் கேட்கவில்லையே!” 'இது ஒரு சந்து. இன்னும் போனால் நேரே ஒரு பளளிக்கூடக் காம்பவுண்டில் முட்டிப்போம். பரவா யில்லை. அமைதிதான். அகத்தமும் கிடை யாது. ப்ரலாந்து விளையாடிக் கொண்டிருக்கலாம். அவனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.” 'அந்த லேட், மனக்சந்த் ஸ்ர்க்கார், பக்கா பெரிய மனுஷன். அவனிடம் ஒரு பதினஞ்சு நாள் சமையல்காரன் வேடிைத்தில் பழகினேனே, இடத்தை நோட்டம் அறியஅப்போ தெரிந்துகொண்டேன்; நான்தான் காலி. அவன் என்னை முழுக்க நம்பினான். நான்தான் அவன் உப்பைத் தின்றுவிட்டு அவனிடமிருந்தே திருடினேன். உண்மையைச் சொல்லி, தயவாகக் கேட்டிருந்தால், அவனே தவணை ஏற்பாடில் ஏதேனும் வழி சொல்வியிருப்பானோ என்று கூட இப்போது தோன்றுகிறது. இப்போது தோன்றி என்ன பிரயோசனம்? ஆனால், அவன் சாவியையே போட்டு, ஸ்ேஃபிலிருந்து நகையைத் திருட, முன்பின் பழக்கபேயில்லாமல் எனக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது? ரொம்பத் திகைப்பாயிருக்கிறது, கோமதி. புத்தி இப்படிப் போனதுக்குத் தெய்வம் காரணமா, நானா?