பக்கம்:பிராயச்சித்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 லா. ச. ராமாமிருதம் சமயத்தில் புத்தி பேதலித்துப் போகிறதே, இதை என் குற்றம் என்று ஒப்புக் கொள்ளாமல் விதிமேல் ஏன் பழி போடுகிறோம்?" "ப்ளீஸ், ப்ளீஸ் ரொம்ப நொந்துக்காதேங்கோ ஸ்ார்... எனக்குத் தாங்காது.' 'நொந்துகொள்ளவில்லை. யோசனை செய்கிறேன்.' 'நீங்கள் சொன்னேளே, லேட்டோடு சமாதான வழியில் நீங்கள் நகையை மீட்டுக் கொடுத்திருந்தாலும் ஒரு லாபமும் இருந்திருக்காது.' 'ஏன் அப்படிச் சொல்கிறாய்?" 'ஏனா? மற்ற நகைகள் போன வழி அதுவும் போயிருக்கும்.’’ 'ஒ: ஒ!: சுறிலெனப் புரிந்தது. மறுபடியும் சங்கடமான மெளனம். இரண்டு கைவிரல் நுனிகளும் மோவாய் அடியில் கூரை போட்டுக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தார். அவர் மட்டுமன்று, அவரவர், அவரவர் யோசனையில். ஒரு பr இந்நேரத்தில் வழிதப்பி இரவில் எங்கோ அலைந்தது. உருவம் தெரியவில்லை. அதன் கூவலின் ஏக்கம் மட்டும்... சகோமதி!' 零惑 , : r 2 % ... ...) . 4 ° छ। ४७ » Í 'என் திருட்டுக்குத் தண்டனை அடைந்த போதிலும் நான் நகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை. என்னைப் போலீஸ் என்னென்னவோ இம்சை பண்ணினார்கள். ஆனால் போலீஸாரால் நகையைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. ’ "ஏன் ஸார்? சொல்லித் தொலைத்திருந்தால் விஷயம் இந்த அளவுக்கு முற்றிப் போயிருக்காதே!’’