பக்கம்:பிராயச்சித்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 லா. ச. ராமாமிருதம் 'அப்புறம் தனிப்பட்ட முறையிலே ஒரு ஆள வந்து ஏதோ நகைபத்தி விசாரிச்சான். கல்லுக் கல்லா தான் பூட்டியிருக்கறதைப் பார்த்துட்டுப் பட்டிமவனுக்கு என்ன பட்டுதோ? திருட்டு நகை, கடத்தல் பொருள் வியாபாரம் பண்றோம்னு எண்ணினானோ என்னவோ? அப்பட் டம்மா அப்படிக் கேக்கல்லே, ஆனால் அவன் கேள்வி போற வழி தெரியாதா? ஆனால் அப்புறம் வரல்லே. "ஆனால் எங்க வீட்டு ஐயாவுக்குப் போலிசான் வீட் டுள்ளே பூந்துட்டானேன்னு உள்ளாற இடிஞ்சுட்டாரு. என்னாத்துக்குப் புகுந்தான்? யார் தப்புக்குப் புகுந்தான்? அண்டை அசலும் தெருவுலே போறவனும் என்னாத்தைக் க்ண்டானுஹ?’’ குன்றிப்போனார். "ஆச்சி இப்படியெல்லாம் நேரும்னு...' "மறந்துட்டேனே! டே சாமிவேலு, ஐயாவுக்கு ஒரு காப்பி வாங்கியா. வேண்டாம் ஆச்சி.' 'அப்படிச் சொல்லக்கூடாது. எத்தின நாள் கழிச்சுப் பாக்கறோம்? தவிர துக்கத்துக்கு வந்தவங்களை வெறும் வவுறோடு அனுப்பக் கூடாதுன்னு சாஸ்த்ரம் வேறு இருக்குதுங்க. சரி எங்கே விட்டேன்? ஆமா, அப்பறமே கஸ்டத்து மேலே கஸ்டம், வீட்டுலே திருடன் பூத்துட் டான். நல்லவேளை ஒண்டியாளா வந்திருப்பான்போல நாலு பேரா வந்திருந்தாலோ அதுபத்திப் பேச நானே இருந்திருக்க மாட்டேன்... ஜன்னல் கம்பியை வளைச்சு உள்ளே பூந்துட்டான்- குடிங்க குடிங்க ஏன் மயங்கறிங்க, ஆறிப் போவுதே!' முதல் முழுங்குக்கு மேல் முடியவில்லை. தொப்புள் வரை கசந்தது. காப்பி அல்ல.