பக்கம்:பிராயச்சித்தம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 47 கடையை விட்டு இறங்கினதும் தொண்டை காய்ந் திருப்பது தெரிந்தது, தொண்டையின் உள்சுவர் ஒட்டிக் கொள்கிற மாதிரி. அவ்வளவு வறட்சி. வீடுபோய் சேரும் மட்டும் தாங்காது, நோட்டை உடைக்கும்படி ஆயிற்று. என்ன செய்வது? இருப்பதால்தானே பயன்படுத்தத் தோனறுகிறது! இல்லாவிட்டால் என்ன செய்வாய்? என்கிற கேள்வியும், புத்தியினுடையதுதான், ஆனால் புத்தி கேட்கிறதோ: வீடு சேர்ந்ததும் பெட்டியைச் சோதித்தார். பூட்டா மண்ணா? சும்மா ஒரு வளைத்த கம்பி. அவருடைய துணிகள்-அவசியம் வரவேற்க வேண்டி யவைதான். உருப்படியானதொரு பலன். அவருடைய குட்டிக் காப்பிஃபில்ட்டர் தம்ளர். கோமதிக்கு மனம் நோகாமல் பக்குவமாகச் சொல்லி, ‘இனி என் தம்ளரிலேயே என் காப்பி, என் குடிதண்ணிர்.' பாஸ்புக் F.D. ரசீது, காசோலைப் புத்தகம், அவை யெல்லாம் காணோம். போலீஸ்தான், வேறு யார்? ஏதோ ஒரு துணியில் தற்செயலில் சுருட்டிக்கொண்டு நீளமாக...என்னது? பிரித்தால்-ஆ எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டார். உடல் பூரா ரோமாஞ்சலி. கண்களில் ஒற்றிக் கொண்டார். போட்டது போட்டபடி. எல்லாம் மறந்து போச்சு ஒருமுறை நன்கு துடைத்து குழலை உதட்டுக்கு வைத்து, அதனின்று, மூன்றரை வருடங்கள் கழித்து. -அந்த முதல் சப்தத்தின் தென்றல் உள்ளத்தைக் குளிப்பாட்டி, பந்தல் நனைந்து பச்சை கொண்டு, மிச்சப் பங்கு உலகிற்கு என்று வெளிக்கிளம்பியதும் மனிதன் தன்னை இழந்தான். 率 枣 率