பக்கம்:பிராயச்சித்தம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 லா. ச. ராமாமிருதம் இண்டனே, உனை நான் வேறு எவ்வாறு விளிப்பேன்? "காதலனே' என்பேனா, தம்பி’ என்று உறவு வைத்து அழைப்பேனா? 'நேற்று உனை நான் நட்டேன். ஆதலால் நாளை நீ பழமாகி எனக்குப் பாக்கி' இதுதானே உறவு? ஆனால் எனையே உனக்குத் தந்துவிட்டேன். பின் இன்னும் என்னால் உனக்கு ஆவது என்? இதுதான் நட்பு. நண்பனே, இந்நாள் நம் பிரிவை நான் தனியில் உணரக்கூட இயலாது, நீ என்னில் ஊறிப் போய் விட்டாய். அறிவும் நினைப்பும் தாண்டி, தன்மைகளின் தனி அழிந்து மோனத்தில் குழைவே நட்பு. பிழிந்த இனிப்புத் தவிர பலாதிகள் எது எது கலந்த பக்குவத்தை இனி எண்ணுவதில் என்ன? எத்தனை நாள் பிரிந்து போனோம், இத்தனை காலம் எப்படிப் பிரிந்தும் இருந்தோம், மீண்டும் சந்தித்த பின்னர் தானே தாண்டிவந்த கடல் மிரட்டுகிறது, அதன் பரப்பில். அடசட்...சமுத்ரமாம், கடலாம்! பிரிவு தீர்ந்தபின் சமுத்திரம் வாய்க்கால் அதிசயம் இருவருமே சிறை யிலிருந்தோம். நீ பெட்டியில் நான் கம்பிகளுக்குப் பின்னால். உனக்காக நான் இருந்தேன் என்று ஏமாற்றிக் கொள்ள முடியுமோ? ஆனால் சந்தேகமற நீ எனக்காகச் சிறையிருந்தாய். உலகம் உன்னை ஜடப்பொருள் என்கும். நீயா ஜடம்? p"9!