பக்கம்:பிராயச்சித்தம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 லா. ச. ராமாமிருதம் அந்தப் பணத்தை ஒரிருமுறை பெரியப்பாவிடம் கொடுக்க முயன்றபோது, தொடக்கூட மறுத்துவிட்டார். 'அதில் கலந்திருக்கும் எண்ணங்களை, தகாத செயல்களை நீயும் நானும் அறியோம். அவனவன் சுத்தமே, பெரும் பாடாயிருக்க, மற்ற அசுத்தங்களையும் தொட்டு, இந்தக் காசின் மூலம் இதைக் கொடுத்தவனையும் நான் தொட ணுமா? எனக்கு அது தேவையில்லை.” பெரியப்பாவின் வார்த்தைகள் ஆணித்தரமானவை . மறக்க முடியாதவை. சிந்திக்கச் சிந்திக்க, அவைகளில் புதுப்புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்.ே யிருக்கும். பெரியப்பா அப்படித் தன் ஒரு மனத்திண்மையில் காத்த தூய்மைதான் இன்னும் அவள் முகத்தில், நெற்றியில், சிரிப்பில், மோவாய்க் குழிவில் துலங்குகிறது. இல்லாவிட்டால், இன்னமும், இந்த முறையில், பெரியப்பா போன பின்னரும்கூடத் தாக்குப் பிடிக்கும் அந்த ஆசார சீலத்தை மணியும் நானும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியுமா? மூர்த்தி என்னவோ சின்னதுதான். அடி அகலமாக ஆரம்பித்து படிகள், படிப்படியாகக் குறுகி, தாமரையில் அம்பாள் நிற்கிறாள். உற்சவர் கிடை யாது. ஆகையால் புறப்பாடுகளுக்கு வழியில்லை. நினைத்த அரைக்கண, கால் வினாடிக்குக் கனத்த தவத்தின் தருணங்கள் அனைத்தும் ஒரு முகமாக ஆஹ"தியான காரணந்தானோ என்னவோ, கமலாம்பிகை, அவளுடைய அழகு ரஹஸ்யம் ப்ரபையாக அவளைச் சூழ, அதன் நடுவே ஒளிர்கிறாள். கல்லின் தரமா, இழைப்பின் உயர்வா தெரியவில்லை. உள்ளங்கைக்கு அவள் ஸ்பரிசம் அத்தனை ம்ருது, கூச்சம், பயம்.