பக்கம்:பிராயச்சித்தம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 63 நிர்மாலியத்தையும் ஆடையையும் களைந்து, விக்ர ஹத்தின் மீது கைப்பட்டவுடன் தர்மராஜனுக்கு மூர்ச்சைப் போட்ட மாதிரி ஆகிவிட்டது. கர்ப்பக்ருஹத்துக்கு வெளியே நிற்பவர், மற்ற சூழ்நிலையின் நினைப்பு, அனைத்தும் ஒரு பெரும் இருள் குழைவில் கரைந்து போயின. கூரையிலிருந்து சங்கிலியில் ஒரு பெரிய அகல்விளக்கு லேசாக ஆடிற்று சுடர் மட்டும் நட்ட இலையாக அசை வற்றுச் செவந்து, பழுத்து, விளும்பில் நீலம் லேசான நூல் கோடு கட்டி, திரும்பவும் செவந்து, மாறி மாறி இதே முறையில் இந்த வர்ண ஜாலம் நிகழ்ந்தபடி, கமலாம்பிகை சுடர்வண்ணத்தில் ஸ்வரூபமாக மாறினாள். பிரதிஷ்டையாகி இருநூறு வருடங்களாயிருக்கும் என்று பெரியப்பா சொல்லியிருக்கிறார். உத்தாரணத்தி விருந்தே, இந்தக் குடும்பம்தான், தலைமுறை தலைமுறை யாகப் பூஜை செய்து வருகிறது. பெரியப்பா இருந்தவரை, பூஜைக்கு வேறு யாரையும், தன் தம்பி, பிள்ளைகளைக்கூட, விக்ரஹத்திடம் விடுவ தில்லை. ஒரு கைப்பட இருந்தால் தான் மூர்த்தம் கூடும்’ என்பார். ஆகவே, அபிஷேகத்துக்கு அண்டாவில் ஜலம் கட்டுவோம். தீபாராதனையின் போது, விதவிதமான தீபாராதனைகளை ஏற்றிப் பெரியப்பா கையில் கொடுப் போம். பிறகு உபசாரங்கள். விசிறி, கண்ணாடி, சாமரம், இத்யாதிகளைக் கொடுப்போம். அத்துடன் சரி. கடைசி யாக அந்தப் பெரிய பஞ்சமுக தீபாராதனை ஆனதும், அதைப் பெரியப்பாவிடமிருந்து வாங்கி வெளியே ஜனங் களுக்கு ஒற்றிக் கொள்ளக் காட்டி குங்குமத் தட்டில் அங்கங்கே விழும் சில்லரையை மட்டும் இடுப்பில் நிமிண்டிக் கொள்வோம்.