பக்கம்:பிராயச்சித்தம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 லா. ச. ராமாமிருதம் இவைகளில் இஷ்டம் வரித்த வடிவம், அந்த இஷ்டத் தாலேயே மனதுக்கு உயிர்த்து, இஷ்டம் தந்த நாமம் தரித்து, நாமத்தின் உருவேற்றலில் உரம் கொண்டு, இதயத்தில் இடம் கொண்டு பீடமும் ஏறுகையில் இவளே கமலாம்பிகை, இவளே புவனேஸ்வரி, இவளே என் நெஞ்சத்தின் நாயகி, அந்தந்த சமயத்தின் தேவி, தரிசனி. எழுச்சிகளின் அலை மோதல் தாங்க முடியவில்லை. அவைகளின் மகிழ்ச்சியே ஒரு துன்பமாய் அந்தத் துன்பமே ஒரு இன்பமாய்...என் செய்வேன்? என் செய்வேன்? பெட்டிமேல் புல்லாங்குழல் கண்பட்டது. எடுத்து வாசிக்கத் தலைப்பட்டார். குழலுள் என் மூச்சு என் பிராணாக்னி. குழிலுள் உறங்கிக்கிடந்த ஓசை உயிர்த்தெழுந்து வெளிப்பட்டு ஸ்வரங்களாகப் பிரிகையில் ஒவ்வொரு ஸ்வரமும் என் மூச்சின் அக்னிக்கு ஆஹ"தி. குழலுள் புகுந்து கண்ணாமூச்சி விளையாடுகிறாளே. தாங்கமுடியல்லியே! குழல் நழுவி மடியில் விழுந்தது. ஒரு பெரும் கேவல் அவரினின்று புறப்பட்டது. முகம் கைகளில் புதைந்தது. தோள்கள் குலுங்கின, கூடவே தெரி கிறது. இதுவும் ஒரு மனநிலைதான். உரிய நேரத்தில், நினைவு மாடத்தில் இந்த சமயமும் தன் தழும்போடு, தன் இடத்தில் ஒதுங்கிவிடும். உடனே அடுத்த அலை... ஒடிப்போய் அவரை அனைத்துக்கொள்ள, தோள் மேல் அவர் முகத்தைச் சார்த்திக் கொள்ளத் தவித்தது. ஆனால் தவிப்பது தவிர என்ன செய்யமுடியும்? பால் மணி வண வணத்தது.