பக்கம்:பிராயச்சித்தம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 லா. ச. ராமாமிருதம் ஒட்டித்தான் முழுக்காவியமே ஒடுது. இந்த weakness தெரிஞ்சுதான் அந்த ரஸவாத சக்தியைக் காக்கத்தான் Bishopக்கு வேண்டிய பின்னணி கட்டுவதற்காக அந்தக் காரெட்க்டருக்குத் தனி வால்யூமே எழுதி விட்டிருக்கார். என்னதான் எழுதினாலும் என்னதான் காரை பூசினாலும் அங்கே காதுலே பூ சுத்தல் நடக்கத்தான் நடக்குது.' தர்மராஜன் பெருமூச்செறிந்து எழுந்தார், எதிரே கோப்பையில் காப்பி வெள்ளை பூத்துவிட்டது. "நீங்கள் எதைத்தான் நம்பப் போகிறீர்கள்? எதையும் நம்பாதே. உன்னைப் பெத்தவளையும் நம்பாதே என்பது தானே உங்கள் அரிச்சவடி, ஆத்திச்சூடி எல்லாமே! இன்ஸ்பெக்டர்- கை கூப்பின்ார். "என்னை வேட்டை யாடாதீங்க. நான் ஆயாசமாகிவிட்ட ஒரு கிழவன் நான் செய்த குற்றம் என்னவாக இருந்தாலும் அதன் தன்மையும் தீவிரமும் என்ன என்று இன்னும் குழம்பிக்கொண்டிருக் கிறேன். எப்படியும் அதற்குச் சட்டம் கொடுத்த தண்ட னையை அனுபவித்தாகிவிட்டது. என்னை வாழவிடுங்கள் என்று கேட்கவில்லை. எனக்கு மிச்சம் இருக்கும் நாட் களை கிடைத்த அளவு அமைதியில் கழித்துவிட்டுச் சாக விடுங்கள்.' இன்ஸ்பெக்டர் சற்றுத் திணறிப்போனார். "Now மிஸ்டர் தர்மராஜன்...' தர்மராஜன் திடீரென்று கோபாவேசத்துக்கு íQíí ሸኽ னார். சரி நிறுத்துங்க. இந்தத் துரண்டில் விளையாட் டெல்லாம் வேணாம். இதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. யோசிச்சுகிட்டேயிருங்க. நான் வரேன்.' ‘விர்'ரென எழுந்து போய்விட்டார். . இன்ஸ்பெக்டர் குனிந்த தலையை இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு சற்றுநேரம் உட்கார்ந்திருந்தார்.