பக்கம்:பிராயச்சித்தம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 லா. ச. ராமாமிருதம் வாய்த்தவன் சரியாக அமைஞ்சு, உடன் இருந்தால் என் நிலை நிறைவு கண்டிருக்கும். அப்புறம் உயிரோடு இருக் கவே தேவைதான் என்ன? உயிர் நீடிக்கவே கஷ்டம்தான் காரணம். நான் படும் ஆசை துராசைன்னு எனக்கு உறுத்தத்தான் எனக்குக் கணவன் இப்படி நேர்ந்திருக்காப் போலவும்... சே, இந்தச் சமயத்தில் அந்த ஆளைப்பற்றி நினைக்கறதே பாயசத்தில் ஈ விழுந்தாப்போல அருவருப் பில் உடல் குலுங்கிற்று. கோமதீ!'

  • “Gg了方。””

'வேலையாயிருக்கியா? உன்னோடு கொஞ்சம் பேச்ணும்.' "இதோ வந்துட்டேன்." 'வா இப்படி உட்கார். நேற்று ஒரு விஷயம். அது சின்னதா, பெரிதா இல்லை விஷயமே இல்லையா? போகப் போகத்தான் தெரியணும். நேற்றுப் போலீஸ் ஸ்டேஷ னுக்குப் போகும்படி ஆயிற்று." கோமதிக்கு நாடியே ஒடுங்கிப் போயிற்று. உள்ளே சுவர் கேவுவது தெரிந்தது. அறியாமலே ஒரு கை மார்க் குலையைத் தொட்டுக் கொண்டது. 'என்ன ஆச்சு? 'ஒன்றும் ஆகிவிடவில்லை. பயப்படாதே." s, -- "என்னதான் ஆச்சு, சொல்லுங்களேன் லார்!’ குரலில் அழுகை நடுங்கிற்று. "என் கேஸைப் பார்த்துக்கொண்டிருந்த இன்ஸ் பெக்டர் நான் தெருவில் போவதைப் பார்த்து என்னைக் கூப்பிட்டு, வரவழைத்து இருவரும் பேசினோம்.'