பக்கம்:பிறந்த மண்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்ர். பார்த்தசாரதி 11%

மறைத்துக் கொண்டு நடிக்க முயன்றான். விநயமாக அடக்க, வொடுக்கத்தோடு அவள் மேஜைக்கு முன்னால்போய் நின்று கொண்டான். குனிந்து கடிதங்களைப் படித்துக்கொண்டி ருந்தவள் மேஜை மேல் அவன் நிழல் விழுந்ததும் நிமிர்ந்து பார்த்தாள். பார்வை வெட்டுவது போலிருந்தது.

அவனுடைய குரலில் நளினமும் நைச்சியமும், ஒன்று பட்டுக் குழைந்தன. "மிஸ் பூர்ணா! நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்குப் போட்டியாகவோ, எதிரியாகவோ இங்கே கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டி ருக்கவில்லை. நீங்கள் சொல்வதைச் செய்வதற்காக உங்களுக்கு உதவியாகவே நான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் எந்தவிதத்திலும் சிறிதுகூடத் தவறாகப் "புரிந்துகொள்ளக் கூடாது; என்னிடம் நீங்கள் கலகலப்பா கவோ, அன்பாகவோ பழகாமல் புறக்கணித்தால் எனக்குப் பெருந்துயரம் ஏற்படும். உங்கள் அன்பையும் நட்பையும், பெறமுடியாததை என் துர்ப்பாக்கியமாகக் கருதுவேன்.நான் உங்களைப் பற்றி எவ்வளவோ பெருமையாக நினைத்து. நம்பிக் கொண்டிருக்கிறேன், என்னை ஏமாற்றிவிடாதீர்கள். என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!”

அழகியநம்பி அருமையாக, தத்ருபமாக நடித்து விட்டான். பூர்ணாவின் கண்கள் அகல விரிந்தன. அவன் முகத்தை இனமக்காமல் சில விநாடிகள் உற்றுப் பார்த்தாள் அவள். அவனுடைய பேச்சில் அவளுக்கு நம்பிக்கை உண்டாக வில்லையோ, என்னவோ? -

'நீங்கள்.என்னை நம்பலாம். நான் உங்களுடையவன். உங்களுக்கு அந்தரங்க நண்பனர்க இருக்க விரும்புகின்றவன். என்னை இந்த இடத்தில் கெர்ண்டுவந்து உட்கார்த்தியிருப் பவர் யாரோ அவரைவிட் உங்களுக்குத்தான் நான் அதிகம் பயன்படுகிறவன்ாக இருப்பேன்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/119&oldid=597247" இலிருந்து மீள்விக்கப்பட்டது