பக்கம்:பிறந்த மண்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நள். பார்த்தசாரதி' 121.

பூர்ணாவின் வேலைக்காரனாக மூன்று மணி வரை, இருந்த அவன் அதற்குமேல் ஒருமணி நேரம் பிரமநாயகத் தின் உண்மை. ஊழியனாக இருந்தான். நாடகத்தில் இரண்டு. வேடம் போட்டுக் கொளளும் நடிகரின் நிலை அவனுடைய நிலையாயிருந்தது. அந்தச் சமயத்தில் பிரமநாயகம் உள்ளே வந்தார்

அவன் எழுந்திருந்து அவரை வரவேற்றான்.அறைக்குள் துழைந்ததும் அவர் பார்வையில் முதன் முதலில் தென் பட்டது இடம் மாற்றிப் போட்ப்பட்டிருந்த மேஜை, நாற் காவிதான் -

"இவற்றை நான் அந்த மேசைக்குப் பக்கத்தில்அல்லவா போட்டிருந்தேன். இங்கே யார் மாற்றிப் போட்டது? கேட் காமல் கொள்ளாமல், இதெல்லாம் என்ன காரியம்?'என்று முகத்த்ைச் சுளித்துக்கொண்டு கேட்டார் அவர்,

பூர்ணா சொன்னாள். தவிர, எனக்கும் இந்த இடம் வாசலுக்குப் பக்கத்தில் கொஞ்சம் வசதியாக இருக்கும் போலிருக்கிறது”-அவன் சொல்ல வந்ததை முடிக்கவில்லை. பிரமநாயகத்துக்குக் கோபம் வந்துவிட்ட்து.'இதென்ன சுத்த முட்டாள்தனமாக இருக்கிறதே! வேண்டுமென்று தானே உன் மேசையையும் நாற்காலியையும், நான் அந்த இடத்தில் போட்டேன். என்னைக் கேட்காமல் நீ எப்படி அதை உன் விருப்பப்ப்டி மாற்றிக் கொள்ளலாம்? பூர்ணா சொன்னாளாம்; பூர்ணா! நாளைக்கு அவளா உனக்குச் சம்பளத்தை மாதம் முடிந்ததும் எண்ணிக் கொடுக்கப் போகிறாள்? நான் கொண்டுவந்து வைத்த ஆள் நீ! எனக்கு ஆதரவாக நடந்து. கொள்ளத்' த்ெரியவெண்டாம்ா உன்க்கு?"-அவ்ருக்கு அப்போது என்ன பதில் சொல்விச் சமாளிப்பது என்று தெரியாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றான் அழகியநம்பி

ச்ே சே! நீ இவ்வளவு மோசமாக இருப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை. படித்த பையனுக்குக் குறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/123&oldid=597259" இலிருந்து மீள்விக்கப்பட்டது