பக்கம்:பிறந்த மண்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$20 பிறந்த மண்

வாங்கி ஸ்டாம்ப் ஒட்டின்ான்.

குப்பைக் கூடையில் ஒரேயடியாகக் காகிதங்கள் சேர்ந்துவிட்டன. மேலே போடுவதற்கு இடமே இல்லை. கொண்டுபோய் வெளியில் கொட்டிவிட்டு வந்துவிடுங்கள்.” எடுத்துக் கொண்டுபோய்க் கொட்டிவிட்டுவந்தான். "அதோ அந்த அலமாரியில் கிளாஸ் இருக்கிறது. எடுத்துக் குழாயடியில் போய்க் கழுவிவிட்டு எதிர்த்த ஹ்ோட்டலில் போய் ஒரு டீ வாங்கிக் கொண்டு வாருங்கள்.” * -

அப்படியே செய்தான். பூர்ணாவுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கியது அந்தப் படித்த ஆண் பிள்ளையின் பொறுமை. அவள் சொன்னபடியெல்லாம் நாயாக ஒடி உழைத்தான் அவன்.  ! மூன்று மணிக்கு அவள் வெளியேறும்போது அவனிடம் தன்னுடைய முகவரி அச்சிட்ட அட்டை ஒன்றைக்கொடுத்து சஆறு, ஆறரை மணிக்கு என்னை வந்து சந்தியுங்கள். சில அந்தரங்கமான செய்திகளைப் பேசலாம்.-என்று கூறி விட்டுப் போனாள். அவன், 'வருகிறேன்"-என்று சம்ம தித்தான், .

14. ஒரு புதிய நண்பன்

அவள் அறையை விட்டு வெளியேறிய மறுகணமே அழகியநம்பியின் வேலைகள் மாறின. பைல்களைப் புரட் டினான். கண்க்கு வழக்குகளைச் சரிபார்த்தான். அன்றைக் குத் தபாலில் வந்த கடிதங்கள்ல்-அவள் தன் கைய்ோடு எடுத்துக்கொண்டு போனவற்றைத் தவிர, மற்றவற்றை எடுதது ஒவ்வொன்றாகப் படித்தான். முக்கியமான-அவசிய மான குறிப்புகளைத் தன்னுடைய டைரியில் நினை ல்ாகக் குறித்து வைத்துக் கொண்டான். . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/122&oldid=597258" இலிருந்து மீள்விக்கப்பட்டது