பக்கம்:பிறந்த மண்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - பிறந்த மண்

தெருத்திருப்பத்தில் பெருமாள் கோயிலுக்கு முன்னால் இருந்த திருக்குளத்தில் படிக்கட்டுகளே தெரியாமல் வெள்ள்த் தண்ணீர் நிரம்பிக்கிடந்தது. அழகியநம்பி 'பெருமாள் கோயில் கோபுரத்தின் உச்சியைப் பராக்குப் பார்த்துக் கொண்டே குளக்கரையோரமாக நடந்து கொண்டிருந்தான். திரைகடல் கடந்து அந்நிய நாட்டுக்குக் கப்பலேறிப் போகப்போகிறவன் யாரிடம் சொல்விக் கொண்டு போவது? யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் போவது? வேண்டியவர்கள் எல்லாரிடமும்தான் சொல்லிக் கொள்ள வேண்டும்! .. -

- பெருமாள் கோயில் குறட்டுமணியம் நாராயண' பிள்ளை, மேலத்தெரு வாசகசாலைச் செயலாளர் கந்தப்பன், முன்சீப் புன்னைவனம் பிள்ளை, புலவர் ஆறுமுகம்;-சொல்லி விடை பெற்றுக்கொள்ள வேண்டிய வர்கள், ஒவ்வொருவராக அவன் நினைவுக்கு வந்தனர். நினைத்துக்கொண்டே குள்க்கரையோரமாக நடந்து கொண்டிருந்தவன், திடீரென்று அங்கே கிளம்பிய அந்தக் கூப்பாட்டைக் கேட்டுத் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தான். : - - --

பத்துப் பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, "ஐயோ! அப்பா" என்று அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே குளத்தின் பக்கம் கையைக் காட்டினாள். பயத் 'தினால் வெளிறிப் போயிருந்த சிறுமியின் முகத்தில் வாய் கோணியது. குளத்தின் உட்புறமாகக் கையைக் காட்டிச் ஆகச்சலிட்டாளே தவிரப் பயத்தினாலும் பதற்றத்தின்ாலும் கடந்தது என்ன என்று சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை.

இந்த நேரத்தில் பணி நீங்காத வைகறைப்போதில் அந்தக் குளக்கரைப் பகுதியில் அழகியநம்பி ஒருவனைத் 'தவிர ஏறக்குறைய ஆள்நடமாட்டமே இல்லை என்று

சொல்லலாம். $

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/16&oldid=596636" இலிருந்து மீள்விக்கப்பட்டது