பக்கம்:பிறந்த மண்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பிற்ந்த மண்

சாப்பிட்டாயிற்றோ, இல்லையோ?”

இங்கே சாப்பிடவில்லை. சாப்பிட வருவார் என்று இவருக்கும் சேர்த்துத்தான் சமைத்து வைத்திருக்கிறேன். வெளியே எங்காவது சாப்பிட்டுவிட்டு வந்தாரோ, என்னவோ!' - - -

'போர்வையை விலக்கி உடம்பைத் தொட்டுப் பார் அப்பா! படுத்திருக்கிற விதத்தைப் பார்த்தால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. உடம்புக்கு ஏதாவது. ”-பிரம நாயகம் பரபரப்படைந்து.கூறினார்.

சோமு அப்படியே செய்து பார்த்துவிட்டு, அதெல் லாம் Nஒன்றுமில்லை. சும்மாதான் படுத்திருக்கிறார். சுற்றித் திரிந்த அலுப்புப் போலிருக்கிறது. படுத்த உடனே நன்றாகத் தூங்கிவிட்டார்”-என்றான். ஏ. அப்பா அழகியநம்பி எழுந்திரு...” - என்று எழுப்பினார் பிரம நாயகம். அழகிய நம்பி அசையவே இல்லை. நல்ல தூக்கத், தில் ஆழ்ந்திருப்பது போலச் சாதித்துவிட்டான். 5ುಖ து க்கம்; தன்னை மறந்து தூங்குகிறார்' என்றான் சோமு. "சரி! நான் கடைக்குள்ளே போகிறேன். கொஞ்சம் வரவுக் கணக்குகளைச் சரிபார்க்க வேண்டிருக்கிறது. பையனை எழுப்பி சாப்பாடு போடு, சாப்பிட்டதும் அங்கே என்னிடம் அனுப்பு” என்று சொல்லிவிட்டுக் கடைக்குள் சென்றார். பிரமநாயகம்.

அவர் போனதும் சோமு அழகியநம்பியை எழுப்ப முயன்றான். பிரமநாயகம் தொட்டுத் தட்டி அசைத்து எழுப்ப முயற்சி செய்தும் அசைந்து கொடுக்காமல் படுத் திருந்த அழகியநம்பி, சோமு மெல்ல ஒரு குரல் கூப்பிட் டதுமே படுக்கையில் துள்ளி எழுந்து உட்கார்ந்தான்.

'நன்றாகத் தூங்கிவிட்டீர்களோ?எப்போதுவந்தீர்கள்?) நீங்கள் வந்ததே எனக்குத் த்ெரியாது. ஐயா. விசாரித். தார்கள். இப்போது சிறிது நேரத்திற்கு முன்புகூட இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/160&oldid=597553" இலிருந்து மீள்விக்கப்பட்டது